விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மன்னும் அழல்நுகர்ந்தும் வண்தடத்தின் உட்கிடந்தும்,*
    இன்னதோர் தன்மையராய் ஈங்குஉடலம் விட்டெழுந்து,*
    தொன்னெறிக்கண் சென்றார் எனப்படும் சொல்லல்லால்,*
    இன்னதோர் காலத்து இனையார் இதுபெற்றார்,*
    என்னவும் கேட்டறிவதில்லை*  -உளதென்னில்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உடலம் வருந்தி - காயக்லேசங்கள் பட்டு
துன்னும் இலைக்குரம்பை துஞ்சியும் - நெருக்கமான பர்ணசாலை களிற்கிடந்தும்
வெம் சுடரோன் மன்னும் அழல் நுகர்ந்தும் - ஸூர்யனோடு பொருந்திய வெய்யிலே பக்ஷித்தும்
வண் தடத்தினுள் கிடந்தும் - அழகிய தடாகங்களிலே மூழ்கிக் கிடந்தும்
இன்னது ஓர் தன்மையர் ஆய் - ஆக இப்படிப்பட்ட ஸ்வபாவங்களையுடையராய்க் கொண்டு

விளக்க உரை

மோக்ஷத்தை இல்லை செய்தல் இவருடைய திருவுள்ளமன்று, வேறொரு தேஹத்தைப் பூண்டு வேறொரு காலத்தில் வேறொரு ஸ்தானத்தில் எம்பெருமானை அநுபவித்திற்காட்டிலும் இவ்வுலுகத்திலேயே இப்போதே இவ்வுடம்போடே எம்பெருமானை அணைந்து மகிழ்வதே இவர்க்குப் பரமோத்தேச்யமாகத் தோன்றினமையால் “கொம்மை முலைகளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றவேல், இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச் செய்யுந் தவந்தானென்?“ என்ற ஆண்டாளைப்போலே மோக்ஷத்தில் வெறுப்பைக் காட்டுகின்றாரே யன்றி, உண்மையில் மோக்ஷ மென்பதொன்றை அஸத்யம் என்று ஸாதிப்பது இவர்க்கு விவக்ஷிதமன்றென்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்