விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன்*  வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை* 
    தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற்*  தாமோதரன் தாங்கு தடவரை தான்* 
    முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்*  முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக்* 
    கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வல் பேய் - கல் நெஞ்சளான பூதனையினுடைய;
முலை - (விஷந்தடவின) முலையை;
உண்டது ஓர் வாய் உடையன் - (உறிஞ்சி) உண்ட வாயையுடையனான;
தாமோதரன் - கண்ணபிரான்;
தன் பேர் - (கோவர்த்தநன் என்ற) தனது திருநாமத்தை;

விளக்க உரை

கண்ணபிரான் பசுக்களுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்து வளர்ப்பதனால் தான்பெற்றுள்ள கோவர்த்தநன் என்னுந்திருநாமத்தை அந்த மலை தனக்கு இட்டு அதனைக் குடையாக எடுத்துத் தாங்கிக்கொண்டு நின்றது - வலியதொரு ஸ்தம்பம் பெருஞ்சுமையைத் தாங்கி நிற்பதை ஒக்குமென்று முன்னடிகளால் உவமித்துக் கூறினரென்க. பரத்தை என்றதன்பின் ‘தாங்கி’ என்றொரு வினையச்சம் வருவித்துக்கொள்ளலாம். கண்ணனைத் தூணாகவும், மலையைத் தூண்தாங்கு சுமையாகவும் உருவகப்படுத்தியவாறு காண்க. தூண் -??? பரம் - ??? கண்ணபிரான் இவ்வற்புதச் செய்கையைப் பிரமன் இந்திரன் முதலியோர்க்குக் காட்டாது பரமகிருபையினால் அற்ப மனிதர்க்குக் காட்டியருளினனென்பார் தரணிதன்னில் என்றார்.

English Translation

Like a strong column supporting a heavy load, the Lord Damodara, with lips that sucked the breast of an ogress, stood on Earth holding aloft a mount that bears his name. That mount is Govardhana, where monkeys in hordes jump from branch to branch, with their little ones clinging to their backs, as they teach them the maze through the forest.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்