விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்னையது பின்னைப் பெயர்தரும் என்பது,*  ஓர்-
    தொன்னெறியை வேண்டுவார் வீழ்கனியும் ஊழிலையும்,*
    என்னும் இவையே நுகர்ந்துஉடலம் தாம்வருந்தி,*
    துன்னும் இலைக்குரம்பைத் துஞ்சியும்,*  -வெஞ்சுடரோன்-

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகில் நல் நெறி மேம்பட்டன நான்கு அன்றே - இவ்வுலகில் நல்வழியாலே சிறப்பித்துக் கூறப்படுகின்ற நான்கு புருஷார்த்தங்கள் நிறைந்திருக்கப்பெற்றவையாம்.
நான்கினிலும் - அந்த நால்வகைப் புருஷார்த்தங்களிலும்
பின்னையது - கடைசியில் சொல்லப்பட்ட மோக்ஷமானது
பின்னை பெயர்தரும் என்பது - இந்த சரீரம் தொலைந்த பிறகு உண்டாகுமென்று (சாஸ்த்ரங்களில்) சொல்லப்படுகிறது,

விளக்க உரை

நன்னெறி மேம்பட்டன் –‘மேம்பட்டன நன்னெறி‘ என்று மாற்றி இயைத்து ச்லாக்யமான புருஷார்த்தங்கள் என்று உரைக்கவுமாம். இங்கே ஒன்று சங்கிக்கலாம். சிறிய திருமடலில் “இப்பாரோர் சொலப்பட்ட மூன்றன்றே“ என்று மூன்றே புருஷார்த்தங்கள் உள்ளனவாகச் சொல்லி, “சிக்கனமற்றாரானுமுண்டென்பாரென்பது தானதுவும் ஓராமையன்றே உலகத்தார் சொல்லுஞ சொல்“ என்று நான்காவது புருஷார்த்தமுண்டென்பவர்கள் அவிவேகிகளென்று தூஷித்தும் அருளிச்செய்த ஆழ்தார் தாமே இங்கு நான்கன்றே என்று நான்கு புருஷார்த்தங்களுண்டாகச் சொல்வது ஸ்வோக்திவிருத்தமாமே என்று –இதுவிருத்தமன்று சிறிய திருமடலில் தமது ஹித்தாந்தத்தை முதல் முதலிலே நிஷ்கர்ஷித்துக் கூறிவிட்டுப் பிறகு மோக்ஷ புருஷார்த்த முண்டென்பாருடைய பக்ஷத்தை அநுவதித்து மறுத்தார், இதில், புருஷார்த்தங்கள் நான்கு என்கிற பக்ஷத்தை முதலில் அநுவதித்து விட்டு, அடுத்த படியாகவே மோக்ஷபுருஷார்த்த முண்டென்கிற பக்ஷத்தைக் கண்டித்து மூன்றே புருஷார்த்தங்களென்கிற ஸ்வஸித்தாந்தத்தையே தலைக்கட்டுகிறார்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்