விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எண்அருஞ்சீர் பேர்ஆயிரமும் பிதற்றி*--பெருந்தெருவே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எண் அஞசீர் பேர் ஆயிரம்  பிதற்றி - எண்ணமுடியாத (கொடிய) குணங்களுக்கு வாசகமான நூதந) ஸஹஸ்ர நாமங்களைப் பிதற்றிக்கொண்டு
பெரு தெருவே - பெரிய தெருவழியே
 

விளக்க உரை

சீரார் திருவேங்கடம் முதலிய பல திருப்பதிகளிலே சென்று ஒவ்வொரு திருப்பதியிலும் ஒரு மூலையிலிருந்து நால்வரிருவர்க்குச் சொல்லி விடுசையன்றிக்கே நெடுவீதியேறப் புறப்பட்டு இங்கே இப்படி குணம் பாராட்டிக்கொண்டுகிடக்கிற மஹாநுபாவனுடைய குணஹாநியை நாட்டாரும் நகரத்தாரும் நன்கு அறியுங்கோள்“ என்று கோஷம்போட்டு மடலூரக் கடவேன், இப்படி நான் செய்வதற்காக ஊராரெல்லாரும் என்னைச் சிறிதும் இகழாமல் தலைமேல் சுமந்து கொண்டாடவேண்டும். அப்படி கொண்டாடாதே இகழ்ந்து பழி சொன்னார்களேயாகிலும் நான் மடலூருகை தவிரமாட்டேன் என்று தனது உறுதியை உரைத்துத் தலைக்கட்டினாளாயிற்று. பெண்ணை என்று பனைமரத்துக்குப் பெயர், “வாரார்பூம் பெண்ணைமடல்“ என்று பனைமடலைச் சிறப்பித்துச் சொன்னது ‘என்கையிலே சிறந்த ப்ரஹமாஸ்த்ரமிருக்கிறபடி பாருங்கள், இனி எனக்கு என்னகுறை? என் காரியம் கைபுகுந்த்தேயாம்“ என்று தான் பரிக்ரஹித்தஸாதநத்தின் உறைப்பைக் காட்டினபடி.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்