விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சலமா முகில் பல் கணப் போர்க்களத்துச்*  சர மாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு* 
    நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்*  நாராயணன் முன் முகம் காத்த மலை* 
    இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்*  இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக்* 
    கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சலம் மா முகில் - நீர் கொண்டெழுந்த காளமேகங்களினுடைய;
பல் கணம் - பல திரளானது;
எங்கும் - இடைச்சேரியடங்கலும்;
பூசல் இட்டு - கர்ஜனை பண்ணிக்கொண்டு;
போர் களத்து சரம் மாரி பொழிந்து - யுத்தரங்கத்தில் சரமழை பொழியுமாபோலே நீர் மழையைப் பொழிந்து;

விளக்க உரை

சலம் -ஜ?ம் கணம் - ?ணம். களம் - வ?ம். சரம் - ?ரம். தவம் - தவ@. சரமாரி என்றவிடத்து உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது. பூசலிடுதல் - இடியிடித்தல். நலிவான் - நலிவதற்காக. வீரர்கள் போர்க்களத்தில் நெறுநெறென அம்புகளைப் பொழிவதுபோல மேகங்கள் திரள்திரளாக நீர்கொண்டெழுந்து முழங்கிக் கொண்டு இடைச்சேரியடங்கலும் நீரைப்பொழிந்து வருத்தப்புக, கண்ணபிரான் மலையைக் குடையாக எடுத்துக்கையிற்கொண்டு நின்றது - கேடயம் என்னுமாயுதத்தைக் கையிற்கோத்துக் கொண்டு நிற்றலை ஒக்கும். கேடயம் பகைவரை அணுகவொண்ணாதபடி தடுப்பதிற் சிறந்த கருவியாவதுபோல இம்மலையும் மாரிப்பகையைத் தடுத்தலில் வல்லதாதலால் இவ்வுவமை ஏற்குமெனக. கேடகம் எனினும், கேடயம் எனினும் ஒக்கும். முன்முகம் காத்தமலை - முகமென்று வாயைச் சொல்லிற்றாய் அது இலக்கணையால் வாய்மொழியைச் சொல்லக்கடவதாய், முன்பு இடையர்கள் இந்திர பூஜை செய்யப் புகுந்தபோது அதனை விலக்குங்கால் “இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம்” என்று தான்சொன்ன வாய்மொழியைத் தவறாமல் காப்பாற்றிக் கொள்வதற்குக் காரணமான மலை என்றுமுரைக்க இடமுண்டு. நாராயணன் - கருத்துடையடைகொளி; பரிசுராங்குராலங்காரம். புலிகளானவை பர்ணசாலைகளில் தவம் புரியாநின்ற ரிஷிகள் கோஷ்டியிற்செல்ல, அவற்றின் கழுத்தை அந்த ரிஷிகள் சொறிந்ததாகக் கூறுவது அவர்களின் தவ உறுதிக்குக் குறைகூறியவாறாகாதோ? எனின்; எல்லாப் பதார்த்தங்களும் எம்பெருமான் தன்மையனவேயாம் என்று கைகண்டிருக்கும் ரிஷிகளாதலால் ஒரு குறையுமில்லையென்க; ??? என்ற சாஸ்த்ரார்த்த அநுஷ்டாநத்தைக் கூறியவாறுமாம். புலிகளின் கழுத்தை ரிஷிகள் சொறியும் போது அவை பரமாநந்தத்துக்குப் பரவசப்பட்டன என்பார், நின்றுறங்கும் என்றார்.

English Translation

When dark laden warring clouds gathered and poured like arrows in a battlefield, wreaking havoc everywhere, the Lord Narayana stood in the forefront and held the mount like a shield. That mount is Govardhana where fierce deadly tigers enter the hermitage; the austere Rishis living in leaf huts stroke their dewlap and put them to sleep standing.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்