விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பேர்ஆயம்எல்லாம் ஒழிய பெருந்தெருவே*
    தாரார் தடந்தோள் தளைக்காலன் பின்போனாள்*

    ஊரார் இகழ்ந்திடப் பட்டாளே?*--மற்றுஎனக்கு இங்கு

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊரார் உறங்கிலும் உறங்கா - எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா,
உத்தமன்தன் - அப்புருஷோத்தமனுடைய
பேர் ஆயினவே - திருநாமங்களா யுள்ளவற்றையே
பின்னையும் - மேன்மேலும்
பிதற்றுவன் - வாய்வந்தபடி சொல்லிக் கொண்டிரா நின்றேன்
கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார் - அகாதமான கடல் போல அளவு கடந்த காமத்தை யுடையவர்கள்
 

விளக்க உரை

இருநூற்றோமத்யாயத்தில் இருபத்திரண்டாம் ச்லோகத்தில். அந்தவத்ஸராஜன் இங்கு “தாரார் தடந்தோள் களைக்காலன்“ என்று ப்ரதிபாதிக்கப்பட்டானாகப்கொள்க. இந்த வரலாறு விரிவாக வந்தவிடத்தே கண்டுகொள்க. துரும்பதவுரைகாரரொருவர் – வாஸவதத்தையான ராஜபுத்ரி வத்ஸராஜனென்பர் னாடே ஸங்கதையாக அவனை ராஜா சிறையிலே வைக்க, அவனையுங் கட்டிக்கொண்டு அவன் பின்னே போனாளென்கிற கதை“ என்றெழுதி வைத்திருக்கக் காண்கிறோமித்தனை. ஆனால் “கதாஸரித்ஸாகரம்“ என்கிற வடமொழிப் புத்தகமொன்றில் பன்னிரண்டாவது தரங்கத்தில் இந்த வரஸவதத்தையின் சரித்திரம் இவ்விடத்திற்குச் சிறிது பொருத்தமாக மிகவும் விரிவா யெழுதப்பட்டுள்ளது. கண்டு கொள்க. அப்புத்தகத்திற்கு எந்தப் புராணம் மூலமென்று ஆராயவேண்டும். வாஸவத்தை யென்பவள் துணிந்து நாயகன் பின்னே பதறிச் செல்லவில்லையா? அவனை யார் ஒதுக்கிவிட்டார்கள்? அவளைப்போலே நானும் தெருவேறப் புறப்படத்தான் போகிறனெனற கருத்தாக உரைத்த பரகாலநாயகியை நோக்கிச் சில பெரியோர் ‘அம்மா‘ இப்படி நீ சொல்வது தகுதியன்று, ஸவரூபஜ்ஞாநமுடையார் இப்படி சொல்லத் தகாது என்றாற்போலே சில விரைக்க, அவர்களைத் தூக்கி யெறிந்து பேசுகிறாள் – மற்றெனக்கிங்காரானுங் கற்பிப்பார் நாயகரே? என்கிறாள். என்னுடைய துணிவுக்கு எதிர்த்தட்டாக வார்த்தை சொல்லி என்னை சிக்ஷிப்பவர்கள் எனக்கு நியாமகரல்லர், அவர்கள் பேச்சை நான் செவியேற்கவேண்டியதே அநாவச்யகம் என்றாளாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்