விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊரார் உறங்கிலும் தான் உறங்கா*--உத்தமன்தன்

    பேர்ஆயினவே பிதற்றுவன்*--பின்னையும்

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஊரார் உறங்கிலும் உறங்கா - எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா,
உத்தமன்தன் - அப்புருஷோத்தமனுடைய
பேர் ஆயினவே- திருநாமங்களா யுள்ளவற்றையே
பின்னையும்- மேன்மேலும்
பிதற்றுவன் - வாய்வந்தபடி சொல்லிக் கொண்டிரா நின்றேன்

 

விளக்க உரை

இப்பரகாலநாயகி இப்படி சொல்லச் செய்தேயும் சிலர் ஸ்வரூபசிக்ஷை பண்ணத் தொடங்கினர், அவர்களை நோக்கிச் சொல்லுகின்றாள் – “ஸ்ரீஜநகராஜன் திருமகள் பத்து மாஸம் ஆறியிருந்தாப்போலே நீயும ஆறியிருக்கவேண்டாவா? அப்படியிராமல் பதறினால் ஸ்வரூபஹாநியன்றோ“ என்றுதானே நீங்கள் சொல்லுவது, ஸ்வரூபஹாநியை நினைத்து ஆறியிருப்பவர்கள் மட்டமான காம்முடையவர்களென்று கொள்ளுங்கள், காரார்ந்த திருமேனியைக் காணவேணு மென்னுமாசை கரைபுரண்டிருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தாலே ஆறியிருக்கப் போமோ? அப்படி ஆறாயிருந்தவர்களுண்டாகில் அவர்களுடைய காதல் அல்பம் என்றன்றோ கொள்ளவேண்டும் –என்கிறாள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்