விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிறங்கிய பேய்ச்சி*  முலை சுவைத்து உண்டிட்டு*
  உறங்குவான் போலே*  கிடந்த இப்பிள்ளை*
  மறம் கொள் இரணியன்*  மார்வை முன் கீண்டான்*
  குறங்குகளை வந்து காணீரே* 
        குவிமுலையீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முற்காலத்திலே;
மறம்கொள் - த்வேஷங்கொண்ட;
இரணியன் - ஹிரண்யனுடைய;
மார்வை - மார்பை
கீண்டான் - பிளந்தவனாய்,

விளக்க உரை

உரை:1

முன்னொரு காலத்தில் பெரும் வீரத்துடன் எதிர்த்து வந்த இரணியனின் மார்வினை சிங்கப்பிரானாகி வந்து கீண்டவன் இவன். இப்போதோ பெரும் ஒளியுடன் வந்த பேய்ச்சியாம் பூதனையின் விஷம் தோய்ந்த முலையை சுவைத்து உண்பவன் போல அவள் உயிரையும் பசையற உண்டான். அச்செயல்களை எல்லாம் செய்தவன் ஒன்றும் அறியாத சிறு பிள்ளை போல் இங்கே உறங்குகிறான். அவனுடைய திருத்தொடைகளின் அழகினை காணுங்கள். குவிந்த முலையை உடைய பெண்களே வந்து பாருங்கள்.

உரை:2

கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்து வளர்கிறானென்பதை நாரதர் சொல்லக் கேட்டறிந்து அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவுகிற கிரமத்திலே, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது விஷம் தடவின முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துத் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் ­ -என்ற வரலாறு முதலடியிற் கூறப்பட்டுள்ளது. நரஹிம்ஹாவதாரம் செய்தவனும் கிருஷ்ணவதாரம் செய்தவனும் ஒருவனே என்ற உண்மையை இவ்வாழ்வார் உணர்ந்தவராதலால் ‘‘மறங்கொளிரணியன் மார்வை முன் கீண்டானாகிய இப்பிள்ளை’’என்றார்.

English Translation

Ladies of risen breasts, come here and see the things of this child, who drained the bright ogress Putana’s breasts with relish and lay like a sleeping child. Long ago he tore apart the hate filled chest of Hiranya Kasipu.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்