விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீரார் நெடுங்கயத்தைச் சென்றுஅலைக்க நின்றுஉரப்பி* 
  ஓராயிரம் பணவெம் கோஇயல் நாகத்தை*
  வாராய் எனக்குஎன்று மற்றதன் மத்தகத்து*
  சீரார் திருவடியால் பாய்ந்தான்* -- தன்சீதைக்கு

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் ஆயிரம் பணம் வெங்கோ இயல் நாகத்தை - ஆயிரம் படங்களை யுடையதும் யமன்போலக் கொடிய ஸ்வபாவத்தையுடையதுமான காளிய நாகத்தை
உரப்பி - அதட்டி
எனக்கு வாராய் என்று - என்னோடு போர் செய்ய வா என்றழைத்து
மற்றதன் மத்தகத்து - அதன் தலைமீது
சீர் ஆர் திரு அடியால் பாய்ந்தான் - (தனது) அழகிய திருவடியால் பாய்ந்து நர்த்தனம் செய்தவன்,

விளக்க உரை

யமுனையாற்றில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினால் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப பானத்துக்கு யோக்கியமாகாதபடி செய்த காளியனென்னும் கொடிய நாகத்தை ஸ்ரீக்ருஷ்ணன் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறி அம்மடுவிற் குதித்து அப்பாம்பின் படங்களின்மேல் ஏறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கிப் பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்ற வரலாறு அறியத்தக்கது. கயம் –கசம், தடாகம். அலைக்கநின்று உரப்பி –நாலு பக்கத்தாலும் சரைக்குமேலே நீர்வழியும்படி கலக்கி என்றவாறு. ஓராயிரம் பணம் – காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு, அவன் நீண் முடியைந்திலும் நின்று நடஞ்செய்து“ என்று பெரியாழ்வார் திருமொழியில் ஐந்து படங்களாகச் சொல்லியிருக்க ஆயிரம் படங்களென்று இங்குச் சொன்னது –பயங்கரத்வத்தின் மிகுதியை விளக்குதற்கு அதிசயோக்தியாகச் சொன்னது என்னலாம், கல்பபேதத்தாலே பொருத்தவுமாம். வெங்கோவியில் – ‘வெங்கோ‘ என்று யமனுக்குப் பெயர், வெம்மை – கொடுமை, அதனையே ஸ்வபாவமாகக் கொண்ட, கோ –ப்ரவு, அப்படிப்பட்ட யமனைக் காளியநாகத்திற்கு உவமை கூறினர். மற்று அதன் என்று பிரித்து, மற்று என்பதை அசைச் சொல்லாக்கவுமாம். மத்தகம் – மஸ்தகம் என்ற வடசொல்விகாரம். சீரார் திருவடி – மேலேத்தலைமறையோர்களது சென்னிக்கு ஆபரணமாக அமையவேண்டிய சிறப்புப் பொருந்திய திருவடியை ஒரு துஷ்டநாகத்தின் தலையிலைகொண்டு வைப்பதே! என்ற வயிற்றெரிச்சல் தோன்றும்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்