விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மோரார் குடம்உருட்டி முன்கிடந்த தானத்தே*
  ஓராதவன்போல் கிடந்தானைக் கண்டுஅவளும்*

  வாராத்தான் வைத்தது காணாள்*--வயிறுஅடித்துஇங்கு  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மோர் ஆர் குடம் - மோர் நிறைந்த குடத்தை
உருட்டி - (அதில் அநாதரம் தோற்ற) உருட்டி
முன்கிடந்த தானத்தே - முன்னே படுத்திருந்த இடத்திலேயே
ஓராதவன் போல் - ஒரு ஸமாசாரமும் தெரியாதவன்போன்று
கிடந்தானை - படுத்துக்கொண்டிருந்த கண்ணனை

விளக்க உரை

யசோதைப் பிராட்டியானவள் இடுப்பு நோகவும், நெற்றி வேர்க்கவும் மிக்க பரிச்ரமப்பட்டு நெடும்போது தயிர் கடைந்து, திரண்ட வெண்ணெயை ஒரு கலத்திலே வைத்து உறயின்மேல் ஸுரக்ஷிதமாக்கியிட்டு ஏதோ காரியமாக அப்பால் சென்றாள், நன்றாகத் தூங்குகின்றவன்போல் கள்ள நித்திரை செய்துகொண்டு, தாய்சேமித்து வைப்பவற்றைக் கண்டுகொண்டிருந்த கண்ணபிரான் உடனே எழுந்து வெண்ணெய்த் தாழியில் தனது இரண்டு கைகளையும் முழுக்க அமிழ்த்தி வெண்ணெயைவாரி அமுது செய்துவிட்டு அருகே மற்றொரு குடத்தைக் கண்டான், அது நிறைய மோராயிருக்கவே அந்த மோர்க்குடத்தை உருட்டிவிட்டு உடனே முன்பு தான் கிடந்த படுக்கையிலே போய்படுத்து “இந்தப் பூனையா இந்த பாலைக் குடித்தது!“ என்ன வேண்டும்படி தான் ஒன்று மறியாதவன் போன்று நெடுங்குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவானாயினான், மீண்டுவந்த யசோதை உறியின்மேலே நோக்காகவே வந்து பார்த்தாள், கையை இட்டாள், வந்தப்படி வைத்தாளோ அந்தக் குறிப்படியே கண்டிலள். ‘அத்தனை வெண்ணெயையும் தின்றுவிட்டானே, ஜரிக்குமோ‘ என்று வருத்தமுற்று வயிற்றிலே மோதிக்கொண்டு ‘இந்த மஹாநுபாவர் தவிர வேறு இங்குவந்தார் ஆருமில்லை, இப்பெரியவர்தாம் இத்தனையும் எடுத்து அமுது செய்திருக்கவேணும்‘ என்று நிச்சயித்துக் கண்ணபிரானை நோக்கி ‘ஸ்வாமிந்! நீர்தாம் இக்களவு செய்தீர், நான்றிவேன்‘ என்று சொல்லிக் கையை பிடித்து, உறங்குகிறவனைத் தூக்கியெடுத்து, கையிலகப்பட்டதொரு கயிற்றாலே அவனை உரலோடே இணைத்து ஊரிலுள்ளா ரெல்லாருங் காண நெருக்கிக்கட்டி, அடங்காத கோபத்தையுடையவள் போன்று அடிக்க, அஸஹிஷ்ணுவாய் ஏங்கி வருந்திக் கிடந்தபடியைச் சொல்லிற்றாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்