விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காரார் குழல்கொண்டை கட்டுவிச்சி கட்டேறி* 
  சீரார் சுளகில் சிலநெல் பிடித்துஎறியா*
  வேரா விதிர்விதிரா மெய்சிலிரா கைமோவா* 
  பேர்ஆயிரம்உடையான் என்றாள்* -- பெயர்த்தேயும் 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அதுகேட்டு - அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த அந்த வார்த்தையையேகேட்டு
கார் ஆர் குழல் கொண்டை - கறுத்த மயிர் முடியை யுடையளான
கட்டுவிச்சி - குறிசொல்லுங் குறத்தியானவள் (ஒருவரும் அழையாதிருக்கத் தானாகவே வந்து)
கட்டேறி - தெய்வ ஆவேசங்கொண்டு
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா - அழகியதொரு சிறுமுறத்தில் நின்றும் சில நெற்களைப் பிடித்தெடுத்து முன்னே வீசியெறிந்து (குறிபார்த்து)

விளக்க உரை

உலகத்தில் முறமானது மயியையும் பதரையும பிரித்துப் பதரை நீக்கி மணியைத் தாங்கிக்கொள்ளுங் கருவி யாயிருப்பதுபோல் இங்கும் பதராகிய தேவதாந்தரங்களை நீக்கி “மணியே மணிமாணிக்கமே மதுசூதா“ என்னப்பட்ட நன்மணியாகிய எம்பெருமானை ப்ரகாசிப்பித்த சுளகு ஆகையாலே “சீரார் சுளகு“ என்று சிறப்பித்துக் கூறப்பட்டது. நெல்லுகளை எண்ணிப் பார்த்து இவளுக்கு பகவத் விஷயமான நோய்தானென்று குறத்திதானறிந்தவாறே “கடல் வண்ணரிது செய்தார்“ என்று சொல்ல நினைத்தாள், எம்பெருமானை வாய்விட்டுச் சொல்லுவதென்றால் எளிதான காரியமோ? “மொய்த்துக் கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று“ என்றபடி சில விகாரங்கள் விளையுமே, அவை விளைந்தன. (அதாவது) வேர்வையடைந்தாள், உடல் நடுங்கினாள், மயிர்க் கூச்செறிந்தாள், இப்படி வாய்விட்டுச் சொல்லமுடியாமல் நிலைதடுமாறி எம்பெருமானுடைய அநுஸந்தானம் முற்றவே தந்மயமாயிருகுந் தன்மையை அடைந்தாள், “விரை குழுவு நறுத்துளவம் மெய்ந்நின்று கமழுமே“ என்றாற்போலத் திருத்துழாய் மணம் மணக்கத் தொடங்கிற்று, கையை மோந்து பார்த்தாள், திருத்துழாய்ப் பரிமளம் நன்றாகத் தோன்றிற்று, ஸஹஸ்ர நாமங்களை யுடையனான எம்பெருமானை (இவளது நோய்க்கு நிதாநம்) என்று நிச்சயித்தாள். எந்தத் திருமேனியைக்கண்டு நான் இந்நோய் பெற்றேனோ அந்தத் திருமேனியை அபிநயித்துக் காட்டினாள். வலங்கையாழி இடங்கைச் சங்கமுடைய பெருமானென்று அபிநயித்தாள், (“கையதுவும் சீரார் வலம்புரி“) என்று சங்கை மாத்திரம் சொல்லியிருந்தாலும் இது சக்கரத்துக்கும் உபலக்ஷணமாமென்க) “தோளிணை மேலும் நன் மார்பின்மேலும் சுடர் முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந் துழாயுடையம்மான்“ என்பதாக அபிநயித்தாள். அதற்குமேல், வாய்விட்டு சிலவார்த்தைகள் சொல்லத்தொடங்கி “அம்மனைமீர்! நீங்கள் இந்நோய்க்குச் சிறிதும் அஞ்சவேண்டா, நும்மகளன்றோ இவள், உங்கள் வயிற்றிற் பிறந்த விவளை க்ஷுத்ரதேவதைகள் தீண்டுமோ? எந்த நாயும் தீண்டிற்றில்லை, தீண்டின மஹாபுருஷனை நானறிந்தேன், இப்போது நான் அபிநயித்துக்காட்டின வகைகளாலே நீங்கள் தெரிந்துகொண்டிருக்கக் கூடுமாயினும் ஸுஸ்பஷ்டமாக நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு அன்னவனை குணசேஷ்டிதாதிகளுடன் விளங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள் – என்று நோய் செய்த எம்பெருமானைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கத் தொடங்கினாள்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்