விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தாரார் நறுமாலைச் சாத்தற்குத்*  தான்பின்னும்

    நேராதன ஒன்று நேர்ந்தாள்*  அதனாலும் 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சீர் ஆர் செழு புழுதிகாப்பு இட்டு - அழகிய சிறந்த பாகவத ஸ்ரீபாத்தூளியைக் கொண்டு ரக்ஷையிட்டு
செம்குறிஞ்சிதார் ஆர் நறுமாலை சாத்தற்கு - செங்குறிஞ்சிமலர்கள் நிறைந்த மணம் மிக்கமாலையை அணிந்துள்ள ‘சாஸ்தா‘ என்கிற தேவதாந்தரத்திற்கு
தான் பின்னும் நேராதன ஒன்று நேர்ந்தாள் - தான் இதுவரை ஒருநாளும் செய்தறியாத ஒரு அஞ்சலியைச் செய்தான்.
அதனாலும் என்சிந்தை நோய் தீராது - அப்படி செய்த்தனாலும் எனது  மனோவியாதானது தீர்ந்த்தில்லை,
என் பேதுறவு தீராது - எனது அறிவு தேடும் தீர வில்லை,

விளக்க உரை

ஆபத்து மிகுந்தால் உடம்பு ஒழியலாமே, ஒழியாமல் ஆத்ம வஸ்துவைப்போலே அழியாத்தாயிருந்துகொண்டு துன்பப்படுத்துகின்ற தீ! என்ற வருத்தம் விளங்கும். பேதுறுவேன் –இரண்டனுருபு தொக்கியிருக்கிறது, பேதுறுவேனை என்றபடி. செங்குறிஞ்சித்தாரார் என்ற வாக்கியத்தில், “நறுமாலைச் சாத்தற்கு“ என்ற பாடமோதவேண்டியதை விட்டு “நறுமாலை சாத்தற்கு“ என்று தப்பான பாடம் ஓதிவந்தனராகையால் இவ்வாக்கியத்தின் பொருளை உள்ளபடி அறியாதொழிந்தனர் பலர், ‘சாஸ்தா‘ என்கிற வடசொல் சாத்தான் எனத்திரிந்து கிடக்கிறதென்பதையறியாமல் “செங்குறிஞ்சித்தார்ர் நறுமாலை சாத்திக் கொள்கிறவனுக்கு“ எற கற்றறிந்த பல பெரியார்களும் பொருள் சொல்லக்கேட்டிருக்கிறோம். அங்ஙனன்று, செங்குறிஞ்சித்தாரார் நறுமாலையையுடைய, (சாத்தற்கு) சாஸ்தா என்று ப்ரஸித்தமாக தேவதாந்தரத்திற்கு என்று உண்மைப் பொருள் உணர்க. சாத்தான் –கு-சாத்தற்கு. இவ்வகைப் பொருளில் “மாலைச் சாத்தற்கு“ என்றே பாடமோத வேண்டும். அமரகோசத்தில் ஸர்வஜ்ஞஸ் ஸுகதோ புத்த) என்று தொடங்கி, புத்த தேவதைக்குப் பெயர்கள் படிக்கப்பட்டுள்ளமை காண்க.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்