விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
    பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-
    சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
    என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பார் கலந்த வல் வயிற்றான் - (பிரளய காலத்தில்) உலகமெல்லாம் வந்து சோப் பெற்ற வலிய திருவயிற்றையுடையவனும்
பாம்பு அணையான் - திருவன்நதாழ்வானைப் படுக்கையாகவுடையவனுமான பெருமானுடைய
சீர் கலந்து - திருக்குணங்கள் நிரம்பிய
சொல் - ஸ்ரீஸூக்திகளை
நினைந்து - அநுணுந்தித்து

விளக்க உரை

உலகத்தில் எல்லாரும் பகவத் குணாநுபவம் பண்ணியே போது போக்கவேணுமென்கிறார். பகவத்குணங்களை அநுஸந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையுமென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு; அப்படி பாவங்களைத் தொலைத்துக்கொள்வதற்காக பகவத் குணாநுபவம் செய்யாவிடில் செய்ய வேண்டா; பகவத் குணாநுணுந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக; ஒவ்வொருவனும் போதைபோக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோரும். பகவத் குணாநுபவத்தாலன்றி வேறொன்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலக்ஷே பார்த்தமாகவாது ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியேயாக வேணுமென்கிறார். இப்படி ஏன் சொல்ல வேண்டும்? உலகத்தில் ஒவ்வொருவனும் பகவத் குணாநுபவம் பண்ணியோ போதுபோக்குகிறான்? இல்லை; சூடாடிப் போதுபோக்குவபார் சிலரும், சதுரங்கம் பொதுபோது போக்குவார் சிலரும், உண்டியே உடையே உகந்தோடிப் போது போக்குவார் சிலருமாய் இப்படி பலவகைகளாலே போது போக்குவாரைக் காணா நின்றோமே; குணாநுபவத்தாலே போது போக்குவாராக ஒருவரையுங் கண்டிலோமே; ஆழ்வாரொருவரேயன்றோ அப்படிப்பட்டவர்; இப்படியிருக்க “என்னினைந்து போக்குவர் இப்போது” என்று குணாநுபவத்தாலன்றிப் போது போக்க முடியாதென்று இவர் எப்படி சொல்லலாம்?- என்று கேள்வி பிற்கும். இதற்கு நாம் என்ன ஸமாதானம் சொல்வல்லோம்; உலகத்தில் தம்முடைய ஸ்வபாவதிதையே பிறர்க்கும் ஸ்வபாவமாக நினைத்துக்கொள்ளுதல் பெரியோர்களின் இயல்பு; பரமைகாந்திகளாய்ப் பிரமவைதிகர்ளான அந்தணர்கள் இரவில் சயனிக்கும்போது தம் மனைவியரை விளித்து, ‘அடீ! சொம்பிலே ஜலம் வையாதே. கவிழ்த்துவை’ என்று சொல்லுவார்களாம்; இப்படிச் சொல்லுவதன் கருத்து அறிவீர்களே! இரவிலே கண்ணன் வந்தால் பொம்மைக் கொள்ள கொள்ள நினைத்து அதனருகே வருந்த அதை யெடுக்கப் பார்க்கும்போது கையலம்பாமல் சொம்பைத் தொடலாகாததென்று தீர்த்தம் தேடுவானாம்; தீர்த்தம் கிடைத்தால் கையை அலம்பிக் கொண்டு செம்மை எடுத்துக்கொண்டு போய்விடுவானாம்; தீர்த்தம் கிடையாவிடில் அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று ஆசாரம் கொண்டாடி வெறுமனே போய்விடுவானாம். இதற்காகவே ‘சொம்பிலே ஜலமின்றிக் கவிழ்த்துவை’ என்று புராதநவைதிகர்கள் திட்டம் செய்வார்களாம். தங்களுடை ஆசாரமே கள்ளர்க்கும் உள்ளதாக அவர்கள் நினைப்பதுபோல், ஆல்வாரும் பகவத் குணாநுபவத்தாலன்றி மற்றொருதனாலும் தமக்குப் போது போக்க அரிதாயிருக்குமியல்வவயே எல்லார்க்கும் உளதாக நினைத்து மிக அற்புதமாகவும் அழகாகவும் இப்பாசுரம் அருளிச் செய்கிறாரென்றுணர்க.

English Translation

The Lord my Krishna recline in the deep Ocean of Milk in Yogic sleep. The ripe clouds have acquired his dark hue. But what penance they must have done, -restlessly tossing in the sky every which may,-to become that!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்