விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாழ்த்தி அவன்அடியைப்*  பூப்புனைந்து,*  நின்தலையைத்- 
    தாழ்த்து*  இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*
    எங்குஉற்றாய் என்றுஅவனை*  ஏத்தாதுஎன் நெஞ்சமே,* 
    தங்கத்தான்ஆ மேலும் தங்கு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரு கை கூப்பு - இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு”
என்றால் - என்று சொன்னால்
உப்பாத - அப்படி செய்யாத
பாழ்த்த விதி - பாழும் விதியையுடைய
என் நெஞ்சமே - என்னுடைய மனமே!

விளக்க உரை

இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில் அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில். இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக்காரியம் செய்யப்பெறாவிடில் தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார். வாய்ப்படைத்தது பயன்படும்படி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தியும், கைபடைத்தது பயன்படும்படி அந்தத் திருவடிகளிலே பூக்களைப் பணிமாறியும், தலை ஸபலமாம்படி அதனை அத்திருவடிகளிலே வணக்கியும் அஞ்ஜலிபண்ணு என்று நன்மையாகச் சொன்னால் அப்படி செய்யாதேயிருந்தும், “எங்கே காண்கேன் ஈன்துழாயம்மான் தன்னையான்” என்று அலற்றாமலிருந்தும் உயிர்தரித்திருக்கவல்லையெல், நெஞ்சே! உன் இஷ்டப்படியே இருந்திடு. ஸத்தை பெற்றிருக்கைக்காக இத்தனையும் செய்து தீர வேண்டியதேயாம் என்று குறிப்பித்தவாறு. “இருகை கூப்பென்றால் கூப்பாத” என்றது நிகழ்காலத்திய நிலைமையைச் சொல்லுகிறதன்று; எதிர்காலத்தில் நேரக்கூடிய நிலைமையைச் சங்கித்துச் சொல்லுகிறபடி. அவனடியை வாழ்த்தாமலும் பூப்புனையாமலும் தலையைத் தாழ்த்தாமலும் இருகை கூப்பாமலும் ஸத்தைபெற்றிருக்க முடியாமையைச் சொன்னபடி.

English Translation

O Heart of mine, bend on self-destruction I say, "Praise the Lord, offer flowers, bow to his feet, and fold your hands in worship", but you will never do that, Go on, if you can be your own without calling, "O Lord, where are you?" do so.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்