விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    துணைநாள் பெருங்கிளையும்*  தொல்குலமும்,*  சுற்றத்து- 
    இணைநாளும் இன்புஉடைத்தா மேலும்,*  கணைநாணில்-
    ஓவாத் தொழில்சார்ங்கன்*  தொல்சீரை நல்நெஞ்சே,* 
    ஓவாத ஊணாக உண். 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துணை - ஸ்நேஹிதர்களும்
நாள் - ஆயுஸ்ஸும்
பெரு கிளையும் - பிள்ளைகள் பேரன்கனென்கிற பெரிய ஸந்தானமும்
தொல் குணமும் - பரம்பரையாக வருகிற நற்குலமும்
சுற்றத்து இணை - பந்துக்களோடே சேர்ந்திருப்பதும்

விளக்க உரை

ஸாமாந்யமாக உலகத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பலனை விரும்புவர்; நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழக்கடவோம்’ என்று சிலர் காமுறுவர்; ‘பிள்ளைகளும் பேரன்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழப்பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்; நற்குலப்பிறவியே நச்சுத்தகுந்தது’ என்று சிலர் நச்சுர்; ‘பந்துக்களோடு கூடி வாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்; ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸார நிலத்திலே அநர்த்தமாகப் பர்யவஸிக்குமேயன்றி இன்பமாகத் தலைக்கட்டாது; ஒருகால் இவையெல்லாம் இன்பமயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நீ இந்த அற்ப பலன்களில் கால்தாழாது பகவத் குணாநுபவமாகிய நல்ல காலக்ஷேபத்தையே மேற்கொள்ளக்கடவை என்று தம் திருவுள்ளத்திற்கு ஹிதமருளிச் செய்கிறார். (கணைநாணில் இத்யாதி.) ஆச்ரித விரோதிகளைக் கிழங்கறக் களைவதே காரியமாகக் கொண்ட இராமபிரான் ஒருநொடிப்பொழுதும் வில்தொழிலை விட்டிருக்கமாட்டான். அப்படிப்பட்ட மஹாவீரனுடைய சரிதமே நித்ய போக்யமாகக்கடவது என்கை. = ஸோத்ரைவ ஹநச்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் புத்த்யாவதய சரிதம் தவ ஸேவதேஸௌ.” என்று அதிமாநுஸ்தவத்திலே ஆழ்வானருளிச் செய்தபடி சிறிய திருவடி இன்றைக்கும் ஸ்ரீராம குணாநுபவமே போதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாராய்ந்து. ஓவாத- ஒரு க்ஷணகாலமும் விட்டு நீங்காத ஊண்- உணவு “பாதேயம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்தநாம்ருத” இத்யாதிகளை நினைப்பது.

English Translation

Good Heart! Even if you were to receive and enjoy good companions, long life, descendants, ancestors, relatives and friends, go on feeding on the glories of the Lord who bears the ever-twanging sarnga bow, as your inexhaustible food.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்