விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உரைக்கில்ஓர் சுற்றத்தார்*  உற்றார் என்றுஆரே? 
    இரைக்கும் கடல்கிடந்த எந்தாய்,*  -உரைப்புஎல்லாம்-
    நின்அன்றி*  மற்றுஇலேன் கண்டாய்,*  எனதுஉயிர்க்குஓர்- 
    சொல்நன்றி ஆகும் துணை.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இரைக்கும் கடல் - கோக்ஷிக்கின்ற திருப்பாற் கடலிலே
கிடந்த - பள்ளிக்கொண்டிரா நின்ற
எந்தாய் - ஸ்வாமீ!
உரைக்கில் - ஆராய்ந்து சொல்லில்,
ஓர் சுற்றத்தார் உற்றார் என்று ஆரே - (நீ தவிர) தாயாதிகளென்றும் பந்துக்களென்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனுமுண்டோ?

விளக்க உரை

எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே நெஞ்ச குளிரும்படியாக இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீ தவிர வேறுயாரும் எனக்க உறவினரல்லர்; ஸகலவித பந்துவும் எனக்கு நீயேகாண்” என்கிறார். “ஓர் சுற்றத்தாருற்றா ரென்றில்லை” என்ற நிஷ்கர்ஷித்தே சொல்லலாமாயிருக்க அங்ஙனம் சொல்லாது “உற்றாரென்ற ஆரோ?” என்ற எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்; நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுளேன்” என்று உத்தரமருளிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும். இரைக்கும் கடல்= எம்பெருமானுடைய நித்ய ஸந்நிதாநத்தாலே மகிழ்ந்து கொந்தளிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்- ‘எந்தை’ என்பதன் விளி. ஓர் சொல் நன்றியாகுந்துணை= அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு “ஸர்வதர்மாந் பரித்யஜய் சரணம் வ்ரஜஅஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண்டோ என்கை. ஸ்ரீ விபீஷணாழ்வானை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே - அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்க அர்த்தமாகக்கொள்ளலாம். இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களை நோக்கிப் பிரதிஜ்ஞைபண்ணி எந்தெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருளிச் செய்திருக்கிறானோ அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பெல்லாம்” என்கிறார்.

English Translation

O Lord reclining in the roaring ocean! Come to think, who are my friends? Who are my relatives? I have none to call save you. Every good world I utter in your praise is my soul's companion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்