விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்*  ஆனாயரும் ஆநிரையும் அலறி* 
  எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப*  இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை* 
  தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்*  புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று* 
  கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அம் - அழகிய;
மை - மை அணிந்த;
தட - விசாலமான;
கண் - கண்களையும்;
மடம் - ‘மடப்பம்’ என்ற குணத்தையுமுடைய;

விளக்க உரை

“எம்மைச் சரணேன்றுகொள் என்றிரப்ப” - எங்களை ரக்ஷித்தருள் என்று வேண்ட என்பது கருத்து. “சரணென்றுகொள்” என்ற பாடத்தை மறுக்க. கண்ணபிரான் மலையெடுத்தபோது, கையில் திருவாழி உள்ளதாகச் சொல்லுகிறவிதுக்குக் கருத்து என்னென்னில்; கண்ணபிரான் இந்திரனைத் தலையறுக்க வேண்டினால் அது அரிய வேலையன்று, கையில் திருவாழியை ஏவிக் காரியம் செய்து முடிக்கவல்ல வல்லமையுண்டு. ஆகிலும் அங்ஙன் செய்யாதொழிந்தது - ‘இந்திரனுடைய உணவைத்தான் கொண்டோமே, உயிரையுங் கொள்ள வேணுமா’ என்ற கருணையைத் தெரிவித்தவாறாம். பின்னிரண்டடிகளின் கருத்து;- மலைக்குறவர் தமக்கு அன்பர்களான குறப்பெண்களின் கண்கள் கொல்லையிலே பரந்திருக்கக்கண்டு அவற்றை மான்களாகக் கருதி, ‘இவை நமது கொல்லையை மேய்ந்து அழிக்கவந்தன, இவற்றை நாம் அம்பெய்து கொல்லுதல் கவிமரபாகையால், இம்மலையிலுள்ள குறத்திகள் மானேய் மடநோக்கிகள் என்பதைப் பெறுவிக்கும் இவ்வர்ணனை. கொம்மை - வலிவு. புயம் - ?ஜம் என்ற வடசொல்விகாரம்.

English Translation

When the cowherd dames, the cowherd men and all the cows screamed with wide eyes for help and sought refuge, my Lord Krishna, bearer of the radiant discus, lifted a mount as a victory-umbrella. That mount is Govardhana, where male gypsies with strong arms point at the wide eyes of their wives moving in the upland bushes saying “Hush! Look, there’s deer grazing”, and aim their bow at them, and they come out screaming ‘Help!’

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்