விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூட்டாய நேமியான்*  தொல்அரக்கன் இன்உயிரை,* 
    மாட்டே துயர்இழைத்த மாயவனை,*  -ஈட்ட-
    வெறிகொண்ட*  தண்துழாய் வேதியனை,*  நெஞ்சே!- 
    அறிகண்டாய் சொன்னேன் அது.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

துயர் இழைத்த - துன்பப்படுத்தின
மாயவனை - ஆச்சர்யனும்
ஈட்ட - திரண்ட
வெறிகொண்ட - பரிமளம் மிக்க
தண் துழாய் - குளிர்ந்த திருத்துழாய் மாலையை யணிந்த

விளக்க உரை

நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும், நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும் உனக்கு ஒருவிசேஷார்த்தம் சொல்லுகிறேன் கேள்; உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர்களாயினும், நான் நினைத்திருப்பதாவது உணரவேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம். “ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” என்று பொய்கையாழ்வாரும் அருளிச் செய்தாராகையால் பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவார்கள்; ஆகையாலே ஒருவர்க்கம் இதை நான் சொல்வதில்லை, உனக்கே சொன்னேன்- என்கிறார். மூன்றடிகளால் பகவத்விஷயத்தை வருணிக்கிறார். சூட்டாய நேமியான் சூடா” என்றகிற வடசொல் ‘சூடு’ என விகாரப்பட்டு, அலங்காரமென்று பொருள் பெற்றுக்கிடக்கிறது. எம்பெருமானைக் கொண்டு அஸுரராக்ஷஸ ஸம்ஹாரம் முதலிய காரியங்களைக் கொள்ள நினைப்பவர்கள் திருவாழியாழ்வானை ஆயுதமாகக் கருதுவார்கள் அங்ஙனன்றிக்கே அநந்யப்ரயோஜநராய் “வடிவார்சோதி வலத்துறையுஞ்சுடாழியும் பல்லாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடுமவர்கள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களெல்லாவற்றையுமே திருவாபரணகோடியிலே அநுஸந்திப்பர்களாதலால் அது தோன்ற இங்கு சூட்டாயநேமியான் என்றார். நேமி- திருவாழியாழ்வான். தொல்லாக்கனின்னுயிரை மாட்டே துயரிழைத்த மாயவன்- எம்பெருமான் அடியவர்களுக்கு அநாதிகாலமாகவே நன்மைகளைச்செய்து வருவது போல, இராவணன் பாகவதர்களுக்கு அநாதிகாலமாகத் தீமைகளியற்றிவருதலால் தொல்லரக்கன் எனப்பட்டான். அவனுடைய இன்னுயிர்க்குத் துயருண்டாகினமாயவன் இரதாமபிரான். மாட்டே என்றது ஸமீபத்திலே யிருந்துகெண்டு என்றபடி. “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. ஸ்மாக் ராகவபாணாநாம் விவ்யதே ராக்ஷஸேச்வர:” என்று- இராவணன் இராமபிரானுடைய அம்புகளை நினைந்து நினைந்து உருவழிந்தானென்று ஸ்ரீவால் மீகிபகவான் பேசினபடியை இங்கு நினைப்பது.

English Translation

O Heart! Learn who the Lord is, I will tell you. He has a sharp discus, he is the wonder Lord who destroyed the terrible Rakshasa Ravana. He is the substance of the Vedas. He wears a cool Tulasi garland.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்