விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்*  வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட* 
    மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப*  மதுசூதன் எடுத்து மறித்த மலை* 
    இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி*  இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும்* 
    குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்*  கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றும் வழு இல்லா செய்கை - ஒரு குறையுமற்ற செய்கைகளையுடைய;
வானவர் கோன - தேவேந்திரனுடைய;
வலிபட்டு - பலாத்காரத்துக்கு உள்பட்டும்;
முனிந்து விடுக்கப்பட்ட - (அவ்விந்திரனால்) கோபத்துடன் ஏவப்பட்டுமுள்ள;
மழை - மேகங்களானவை;

விளக்க உரை

இங்கு இந்திரனை வழுவொன்று மில்லாச் செய்கையனாகக் கூறினது - தான் இந்திர பதவியைப் பெறும்போது அதற்குச் செய்யவேண்டிய ஸாதநங்களில் ஒன்றுங் குறைவில்லாமல் செய்தவனென்பதற்காக. இப்படி வெகு வருத்தப்பட்டு ஸம்பாதித்த இந்திரபதவிக்குப் பிறர்களிடத்தில் பூஜை பெறுவதை ஒரு பெரிய கௌரவமாக இவன் கொண்டிருப்பதனால் அம்மரியாதைக்குக் குறைவுவரவே கோபங்கொண்டனனென்க; ஆகவே, “வழுவொன்றுமில்லாச் செய்கை” என்பது கருத்துடை யடைமொழியாம். “மாத்தடுப்ப” என்பதில் ‘மா’ என்ற விலங்கின் பொதுப்பெயர் இங்கு. பசுக்களையும் கன்றுகளையுங் குறிக்கும்; இடையர்கட்கும் உபலக்ஷணம். மதுசூதன் - மது என்ற அஸுரனைக் கொன்றவன்; மது - வேதத்தை அபஹரித்துக் கொண்டு சென்ற அஸுரர்களில் ஒருவன். பின்னிரண்டடிகளின் கருத்து;- ஒரு பெண் யானையானது தன் குட்டியை ஒரு சிங்கக்குட்டி நலிவதாக வந்து சீறினவளவிலே அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் அந்தத் தன் குட்டியைத் தனது நான்கு கால்களினுள்ளே அடக்கி மறைத்துக்கொண்டு அச்சிங்கக்குட்டியை எதிர்த்துப் போர் செய்தற்கிடமான கோவர்த்தனமலை என்க. இனி, இழவு என்பதற்கு, விட்டுப்பிரிதல் என்று பொருள்கொண்டு வேறுவகையாகவும் கருத்துக் கூறலாம்; குட்டியுந் தானுமாயிருந்த ஒரு பெண்யானை, தன்னை நலியவந்த ஒரு சிங்கக் குட்டியோடு தான் பொர நினைத்து அப்போது தன் குட்டியை இறைப்பொழுதும் தனித்து விட்டிருக்கமாட்டாத தான் அக்குழவியைத் தன் காலிடையடக்கிக் கொண்டு போர் செய்ததாகக்கொள்க.

English Translation

The rains sent under the authority of Indra of faultless Karmas, came and poured for seven days causing misery. Madhusudana lifted a mount and held it upside down like an umbrella. That mount is Govardhana, where a baby elephant when pursued by a young lion takes refuge between the legs of the mother elephant, which fights back the attacker with vengeance.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்