விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பின்துரக்கும் காற்றுஇழந்த*  சூல்கொண்டல் பேர்ந்தும் போய்,* 
    வன்திரைக்கண் வந்துஅணைந்த வாய்மைத்தே,*   -அன்று-
    திருச்செய்ய நேமியான்*  தீஅரக்கி மூக்கும்,* 
    பருச்செவியும் ஈர்ந்த பரன்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பரு செலியும் - பருத்தகாதுகளையும்
அன்று - ஸ்ரீராமாவதாரத்தில்
ஈர்த்த - அறுத்தொழித்தவனுமான
பரன் - ஸ்ரீராமபிரான்
பேர்ந்தும் போய் - (அவதார காரியத்தை முடித்த பின்பு) மறுபடியும் சென்று

விளக்க உரை

முன்னோர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அந்வயிக்கப் பார்த்தார்கள்; தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனாகத்திருவவதரித்துக் தங்கையை மூக்கும் தமையனைத் ததலையும்தடிந்து அவதார காரியங்களைச் செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்தானென்கிற விஷயத்திற்கு ஓர் உபமானம் கூறுகின்றார் இப்பாட்டில். இதில் பின்னடிகளை உபமேயவாக்கியமாகவும் முன்னடிகளை உபமாக வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை; - (அதாவது=) “அன்று திருச்செய்யநேமியான் தீயரக்கிமூக்கம் பரச்செவியுமீர்ந்தபரன்” என்றவளவும் உபமேயலாக்கியம்; “பின்தூரக்குங் காற்றிழந்த ‘சூழ்கொண்டல் பேர்ந்தும் போய் வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து”என்றவளவும் உபமானவாக்கியம். இதன் கருத்து யாதெனில்;- ஆழியங்கையனான பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்துமுடித்து மீண்டும் திருப்பாற்கடலிலே போய்ச் சேர்ந்ததானது எப்படியிருக்கின்றதென்றால்; கடலில் மேகமானது காற்றுத்தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஓய்ந்துவிடுகிறதோ அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடலிலேயே வந்து விழுந்திடுமே; அதுபோலேயிராநின்றது என்றபடி. இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடைகள் மூலத்தில் உளவோ என்று ஆராயவேண்டும். பாட்டின் முடிவிலுள்ள பான் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை ‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்தைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்திணைக்குச் சேராதிறே. ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிப்பதில் குறையுண்டென்று மற்றொருவகையான யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்; (அதாவது-) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தைவருவித்துக் கூட்டிக்கொண்டு “பரன்படியானது- வாய்மைத்து’ என்று அந்வயித்தால் திணைமாறாட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்தார்கள். ஆனாலும் இந்த யோஜநையில் - மூலத்திலில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற அத்யாஹாரமென்பதம் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்; இவ்விரண்டு குறைகட்கும் இடமில்லாதபடி நஞ்ஜீயர் ஸந்நிதியிலே நம்பிள்ளை விண்ணப்பம் செய்த போஜநைதான் இங்க நாம் பதவுரையில் காட்டினது. கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எம்பெருமானை உபமேயமாகவும் காளமேகத்தை அபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று. இப்போது அங்ஙனம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த சூல் கொண்டல்” என்பதே உபமேயம். இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளக்கக்கொள்ளுங்கள்:- ஆழ்வார் எம்பெருமானை அநுபவிக்குந்திறத்தில் நித்ய ஸூரிகளுக்கு மேற்ப்பட்டவராயிருந்தாலும் இவர் தாம் எழுந்தருளியிருப்பது பிரகிருதி மண்டலத்திலேயாகையாலே பிராகிருத பதார்த்தங்களிலும் கண்வைக்க நேருவதுண்டு; அவற்றில் கண் வைத்தாலும் பகவத்விஷயத்தை முன்னிட்டுப் பேசும்படியாயிருக்குமேயொழிய, பகவத்விஷய ஸம்பந்தமின்றியேபிராகிருத பதார்த்தத்தன்மையாக மாத்திரம் பார்ப்பதும்பேசுவதும் இவ்வாழ்வார்க்கு அஸம்பாவிதம் என்பது கீழ் அறுபத்தோராம்பாட்டிலும் நன்கு விளங்கியதே. அதுபோலவே இப்பாட்டிலும் பிராகிருதபதார்த்தங்களில் ஆழ்வார் தமது திருக்கண் ஒடநேர்ந்தபோது, ஒரு மேகமானது கடலில் சென்றிறங்கிக் கழுத்தே கட்டனையாக நீரை முகந்து கொண்டு மேலேகிளம்பி, காற்றுத்தள்ளத்தள்ள ஆகாசத்திலே வந்து கொண்டிருக்கும்போது அந்தக் காற்று ஓய்ந்துவிட்டது; காற்றின் உதவியில்லாமல் மேகம் மேலே நடைபயிலகில்லாமல் மீண்டும் அக்கடலிலேயே போய்ச்சென்றது; இதனைக் கண்ணுற்ற ஆழ்வார்க்கு நல்ல பொருத்தமான உபமானம் நினைவுக்க வந்தது. பண்டொருகால், இராமபிரானாகிற காளமேகம் கருணாரஸமாகிற நீரைப் பிரிபூர்ணமாக முகந்துகொண்டு திருப்பாற்கடலினின்றும் புயப்பட்டு, தேவதைகளின் பிரார்த்தனையாகிற காற்று தூண்டத்தூண்ட நிலவுலகத்தே நடந்து வந்து துஷ்டநிக்ரஹம், சிஷ்ட பரிபாலநம், தர்ம ஸம்ஸ்தாபநம் முதலிவற்றைச் செய்துமுடித்து, அவ்வளவிலே தேவதைகளின் பிரார்த்தனை ஈடேறிற்றாக, (தூண்டும்காற்று ஓய்ந்தமையாலே) மறுபடியும் திருப்பாற்கடலிலலே போய்ச்சேர்ந்தாடுனன்கிற செய்தி பொருத்தமான த்ருஷ்டாந்தமாக நினைவுக்கு வரவே அதனைப் பேசி அநுபவித்தாராயிற்று.

English Translation

The dark lightning cloud came rushing, like the bow-wielder lord who cut off the ears and nose of the terrible Rakshasi, then blown by an opposite wind receded, like the discus Lord retiring into his sea abode again.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்