விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வரவுஆறு ஒன்றுஇல்லையால்*  வாழ்வுஇனிதால்,*  எல்லே! 
    ஒருஆறு ஒருவன் புகாவாறு,*  -உருமாறும்-
    ஆயவர்தாம் சேயவர்தாம்*  அன்றுஉலகம் தாயவர்தாம்,* 
    மாயவர்தாம் காட்டும் வழி. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயவர் தாம் - ஆச்சரியருமான சேஷ்டிதங்களை யுடையவனுமான எம்பெருமான்
காட்டும் வழி - காட்டுகிற உபாயம்
வரவு ஆறு ஒன்று - இன்னவழியாக வந்ததென்று தெரியாது;
வாழ்வு இனிது - பலன் போக்யமாயிரா நின்றது;
ஆல் எல்லே - ஆச்சரியம்

விளக்க உரை

ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ; அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யமி மாசுச:” என்ற சரமச்லோகததின் பொருளை அநுஸந்தித்தபடி. கருமம் ஞானம் முதலிய எந்த உபாயங்களிலும் யாரும் இறங்க வேண்டாதபடி அவரவர்களுடைய காரியங்களைத்தான் தன் தலை மீது ஏறிட்டுக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்னிகை. (“உருமாறும்.”) உலகத்தில் எவன் பலனை அநுபவிக்க வேண்டியவனோ அவன் உபாயாநுஷ்டாகம் பண்ணவேணு மென்றிருக்க, பலனை, அநுபவிப்பவனான சேதநனை ஒரு உபாயமும் அநுஷ்டிக்க வேண்டாவென்று விலக்கி, பலனை அநுபவியாத தான் அவன் செய்ய வேண்டிய காரியங்களைத் தன் மீது ஏறிட்டுக் கொண்டு செய்கை உருமாறுகையிறே. இனி, உருமாறுமாயவர் என்றது- பரஞ்சோதியுருவைவிட்டிட்டு அழுக்குமானிடசாதியுருவை ஏற்றுக் கொண்ட கோபாலக்ருஷ்ணன் என்றபடியாம். சேயர்தாம்- பாண்டவர் போல்வார்க்கு அணியனாயிருக்கச்செய்தேயும், துரியோதநன் போல்வார்க்கு தூரஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது. ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கும் ஸமீபஸ்தனாயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்று லகந்தாயவர்தாம் என்று. இப்படி ஒருகால் அணியனாய் மற்றொருகால் சேயனாய், சிலர்க்கு அணியனாய் சிலர்க்குச் சேயனாய் இருப்பது பற்றி மாயவர்தாம் என்கிறது. இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்னருளாலேதானே காட்டும் வழி (உபாயம்) நிர்ஹேதுகமாகையாலே இன்னமார்க்கமாக வந்ததென்று நமக்குத் தெரியாதாயினும், போக்யமாக அநுபவித்துக் கொண்டு ஆநந்தக்கடலிலே மூழ்கியிராநின்றோம்; வாழ்ச்சியில் குறையில்லை; எல்லே- ஆச்சரியம். உலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘இஃது நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் அவசியமன்றோ; ஆநந்தத்தை அநுபவிப்பதன்றோ ப்ராப்தம். அதுபோல ஆழ்வாரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்தக் காரணத்தாலே வந்தாலென்ன? ஆநந்தம் அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார்.

English Translation

There is no way to return. Aho, this new life is sweet! The Lord afar who came as a cowherd lad, the wonder lord who strode the Earth, shows the easy path of freedom from rebirth, Aho, what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்