விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மருங்குஓதம் மோதும்*  மணி நாகணையார்,* 
    மருங்கே வரஅரியரேலும்,*  -ஒருங்கே-
    எமக்குஅவரைக் காணலாம்*  எப்பொழுதும் உள்ளால்,* 
    மனக்கவலை தீர்ப்பார் வரவு.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வரவு - (தம்முடைய) வருகையினாலே
மனம் கவலை தீர்ப்பார் - (நமது) மணத்திலுள்ள துன்பங்களைத் தொலைப்பவரும்
மழுங்கு ஓதம் மோதும் - ஸமீபத்திலே கடலலை மோதும் படியாக. (திருப்பாற்கடலிலே)
மணி நாக அணையார் - மாணிக்கத்தையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடையவருமான பெருமான்.
மருங்கே வர அரியர் எலும் - (ஒருவர்க்கும் ஸ்வப்ரயத்தாலே அணுகி வந்து) கிட்ட முடியாதவராயினும்

விளக்க உரை

எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாதவனேயாகிலும், அவன்றானே தன்னுடைய நிர்ஹேதுகக்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்ததனனாதலால் எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியவனாகவே யிராநின்றானென்கிறார். “வரவு மனக்கவலை தீர்ப்பார்”= ‘வரவு’ என்பதில் மூன்றாம் வேற்றுமையுருபு தொக்கிக் கிடக்கிறது; வாயினாலே என்றபடி. தானாகவே வந்து மனக்கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை ஓதம் மருங்கு மோதும் மணிநாகணையார் ஃதெண்திரை வருடத்திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான்மேல் திருக்கண் வளருமவர் என்றவாறு. இப்படிப்பட்ட பரமபுருஷன். மருங்கே வர அரியரேலும்= ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அணுக முடியாதவனாயினும்; உள்ளால் நமக்கு அவரைக் காணலாம் = என்னுள்ளத்துள்ளே உறைகின்றவனைக்காண எனக்கு அருமையுண்டோ? என்கிறாராயிற்று.

English Translation

The Lord reclines on a diademed serpent in the wave-lapping ocean. He cannot come to us. But we can see him well in our hearts at all times, and be relieved of worries.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்