விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாண்பாவித்து அஞ்ஞான்று*  மண்இரந்தான்,*  மாயவள்நஞ்சு- 
    ஊண்பாவித்து உண்டான்*  அது ஓர்உருவம்,*  -காண்பான்நம்-
    கண்அவா*  மற்றுஒன்று காண்உறா,*  சீர்பரவாது- 
    உண்ணவாய் தான்உறுமோ ஒன்று?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அஞ்ஞான்று - முன்னொரு காலத்தில்
மாண் - வாமாவேஷத்தை
பாவித்து - பாவனை செய்துகொண்டு
மண் இரந்தான் - (மாவலியிடத்துச் சென்று) பூமியை யாசித்தவனும்
மாயவன் - பூதனையென்னும் பேய்ச்சியினுடைய

விளக்க உரை

நம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசுகிறார். இந்திரனுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக வாமநவேஷம் பூண்டுகொண்டு மாவலி பக்கலிற் சென்று மூவடி மண்தரவென்று இரந்தவனும், தான் கிருஷ்ண சிசுவாயிருக்கும்போது கம்ஸனுடைய தூண்டுதலால் தன்னைக் கொல்வதற்காகத் தாய்வடிவு கெணண்டு முலைகொடுக்க வந்த பூதனியினுடைய முலையைச் சுவைத்துண்கிற பாவனையிலே அவளுயிரை உறிஞ்சியுண்டவனுமான எம்பெருமானுடைய விலக்ஷணமான திவ்யமங்கள விக்ரஹத்தைக் காணவேணுமென்கிற ஒரு விருப்பமே நமது கண்களுக்குள்ளது; வேறு எந்த அற்புதமான வஸ்துவையும் இக்கண்கள் காண விரும்புகின்றில. வாய்தானும் அப்பெருமானுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசதலொன்றிலேயே ஊற்றமுடையது; சோறு திண்பதிலும் வாய்க்கு விருப்பமில்லை- என்றாராயிற்று. மாண்- மாணியின்தன்மை; வாமாநத்வம். பாவித்து - வடமொழியில் ***- பூ- ஸந்தாயம்” என்ற தாதுவடிவாகப் பிறந்த வினையெச்சம் அஞ்ஞான்று- அக்காலத்தில்; முன்பொரு காலத்திலென்றபடி. (ஞான்று- காலம். ‘நான்று’ என்பதுமுண்டு; ஞகரநகரப்போலி.)

English Translation

Then in the yore the Lord came as a manikin and begged for land; he drank the poison of the ogress' breast with relish. My eyes crave to see his adorable form, and see nothing else. My tongue seeks to taste his names, nothing else.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்