விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  விண்ணின்மீது அமரர்கள் விரும்பித் தொழ*  மிறைத்து ஆயர் பாடியில் வீதியூடே* 
  கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு*  இளஆய்க் கன்னிமார் காமுற்ற- 
  வண்ணம்*  வண்டு அமர் பொழிற் புதுவையர்கோன்*   விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்* 
  பண் இன்பம் வரப் பாடும் பத்தர் உள்ளார்*  பரமான வைகுந்தம் நண்ணுவரே.* (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

விண்ணின் மீது - பரமாகாசமாகிய ஸ்ரீவைகுண்டத்திலே;
அமரர்கள் - நித்யஸூரிகள்;
விரும்பி - ஆதரித்து;
தொழ - ஸேவியாநிற்கச்செய்தேயும்;
கண்ணன் - ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா;

விளக்க உரை

ஸ்ரீவைகுண்டத்தில் நித்யஸூரிகளனைவரும் தன்னைத் தொழா நிற்கவும் எம்பெருமான் அவ்விடத்தே வீற்றிருந்து தனது பரத்துவத்தைப் பாராட்டலாமாயிருக்க, அங்ஙன் செய்யாது இடைச்சேரியில் வந்து பிறந்தது தனது ஸௌசீல்யத்தை வெளிப்படுத்துகைக்காகவென்க. காமுற்ற - ‘காமம் உற்ற’ என்பதன் தொகுத்தல். பக்தர் - ---?. இப்பாட்டால் இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டியவாறு. அடிவரவு :- தழை வல்லி சுரிகை குன்று சுற்றி சிந்துரம் சால சிந்துரப்பொடி வலம் விண் அட்டு.

English Translation

This decad of songs by Vishnuchitta, King of Srivilliputtur of bee-humming groves recalls how the young cowherd girls expressed their desires on seeing Krishna in the streets returning with the cows, evading the gods in heaven who waited to worship him. Devotees who can sing it musically evoking joy will enter Vaikunta.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்