விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வகைசேர்ந்த நல்நெஞ்சும்*  நாஉடைய வாயும்,* 
    மிகவாய்ந்து வீழா எனிலும்,*  -மிகஆய்ந்து-
    மாலைத்தாம்*  வாழ்த்தாது இருப்பர் இதுஅன்றே,* 
    மேலைத்தாம் செய்யும் வினை?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாம் - சேதநராயப் பிறந்திருக்கிற தாங்கள்
மிக ஆய்ந்து - நன்றாக ஆராய்ச்சி பண்ணி
நா உடைய வாயும் - (எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான) நாவோடு கூடிய வாக்கும்
மாலை - எம்பெருமானை
வாழ்த்தாது இருப்பர் - வாழ்த்தாமல் வாளா கிடக்கின்றார்கள்

விளக்க உரை

இப்பாட்டுக்குப் பிள்ளைதிருநறையூரரையர் ஒரு படியாகவும் பட்டர் ஒருபடியாகவும் நிர்வஹிப்பராம். அரையர் நிர்வஹித்தபடி எங்ஙனமே யென்னில்; - வகை சேர்ந்த நல்நெஞ்சும் = எம்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் ஏதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும், அந்த ஒரு குண சேஷயயதத்தையே பேசிப் புகழ்ந்து கொண்டிருக்கிற நாவோடு கூடின வாக்கம் அப்பெருமானுடைய எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அநுபவிக்கமாட்டா திருந்தனவேயாகிலும், எப்படியாவது கஷ்டப்பட்டு ஸகலகுணங்களிலும் ஸகலசரித்திரங்களிலும் நெஞ்சு பொருந்தும்படி செய்து கொண்டு ஸர்வேச்வரனை அநுபவித்து மங்களாசாஸநம் பண்ண வேண்டியிருக்க, அங்ஙனே பண்ணாதிருக்கிறார்கள் ஸம்ஸாரிகள் ; இஃது ஏன்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக் காரணம் - என்பதாக அரையர் நிர்வாஹம். பட்டர் நிர்வாஹமெங்ஙனே யென்னில்; - ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோகுணமும் தமோகுணமும் மிக்க ஸ்வயமாகவே பகவத் விஷயத்திற் படிந்தவில்லையே யாகிலும், ‘நம்மை ஈச்வரன் படைத்தது ஏதுக்கு? நமக்குக் கைகால் முதலிய கரணகளே பரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டு பாட இழிய வேண்டியது ப்ராப்தமாயிருந்தும் பாழும் ஸம்ஸாரிகள் பகவத் விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே, இதுவரையில் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா யொழிந்தது போராதா? இனி மேலாவது நல்ல வழிபோகத் தேடலாகாதா? மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளாயிருப்பதற்கேயன்றோ இப்படி பாபிகளாய்த் திரிகிறார்கள்! - என்பதாம்.

English Translation

Even if the good heart with its faculty for feeling and the tongue with its faculty of speech do not themselves edge in the lord's praise on their own, thus who make no effort to praise the Lord accrue further Karmas by it.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்