விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தமக்குஅடிமை வேண்டுவார்*  தாமோதரனார்,- 
    தமக்கு*  அடிமை செய்என்றால் செய்யாது,*-எமக்குஎன்று-
    தம்செய்யும் தீவினைக்கே*  தாழ்வுறுவர் நெஞ்சினார்,* 
    யாம்செய்வது இவ்விடத்து இங்குயாது?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாமோதரனார் தமக்கு - தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு
அடிமை செய் என்றால் - (நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்
நெஞ்சினார் - எனது நெஞ்சானது
செய்யாது - அப்படியே அடிமை செய்யாமல்
எமக்கென்று - என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “நிழலுமடிதாறுமானோம்” என்று தாம் எம்பெருமானோடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே; உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நைச்சியம் பாவித்துப் பின்வாங்கத் தொடங்கிற்று. அந்த நிலைமையைக் கண்டு ஆழ்வார்; ‘அந்தோ! என் செய்வேன் நெஞ்ச அநுகூலித்து வரும்போது எம்பெருமான் அருமைப்படுகிறான், எம்பெருமான் எளியனாம்போது நெஞ்சு பின்வாங்குகிறது; இந்த இழவுக்கு என்ன செய்வேன்?’ என்று அலமருகின்றார். பாயை விரித்துவிட்டுக் கணவனை அழைத்து வரப்போனாளாம் ஒரு நாயகி; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டிக் கொள்ளுமாம்; மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பாளாம்; அந்த க்ஷணந்தன்னிலே நாயகன் ஓடிப்போவானாம். பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவளுடைய போது சரிப்போகுமாம். அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப்போகிறது போலும். இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவது பற்றி அந்த வருத்தம் தோன்ற “யான் செய்வதில்விட்த்திங்கியாது” என்று தீநஸ்வரப்பாசுரம் பேசுகிறபடி காண்மின். “தமக்கடிமை வேண்டுவோர்” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; ‘தாம் பிறர்க்கு அடிமை செய்ய ஆசைப்படுவன் எம்பெருமான்’ என்கிற ஒரு பொருளும், ‘தமக்கு அடிமை செய்வார் வேணுமென்று எம்பெருமான் ஆசைப்பட்டிருப்பான்’ என்கிற மற்றொரு பொருளும் செவ்வனே கிடைக்கும். அடிமை என்ற பதத்திற்கு சேஷத்வம் என்றும், சேஷபூதர் என்றும் அர்த்தமுண்டாகையாலே இவ்விரண்டு யோஜநைகளும் ஒக்கும். தனக்கு சேஷத்வத்தை வேண்டுகையாவது- தான் தாஸனாயிருக்க விரும்புகை. தனக்கு சேஷபூதரை வேண்டுகையாவது- தான் ஸ்வாமியாயிருக்க நினைக்கை எம்பெருமானுக்கு ஸ்வாமித்வம் அஸா காரணமாயிருக்கச் செய்தேயும் சேஷத்வத்திலே அவனுக்கு ஆசையாம். ஏனென்னில்; தனக்கு அடிமைப்பட்டவர் பரமாநந்தமடைகிறபடியைத் தான் காண்கையினாலே, தான் ஸ்வாமியாயிருக்குமிருப்பிலே அவ்வளவு ஆநந்தமில்லை யென்றும் சேஷப்பட்டிருக்குமிருப்பிலேயே ஆநந்த மிகுதியுண்டென்றும் கைகண்டு, சேஷித்வத்திற் காட்டிலும் சேஷத்வத்திலே மிக்க விருப்பமுடையனாயிருக்கிறானாம் எம்பெருமான். இங்கு இவ்வர்த்தத்தையே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்- “தமக்கு அடிமையை உகக்குமவர்; அது எங்கே கண்டோமென்றால் (தாமோதரனார்) அநுகூலையான தாயார்க்கு அடியுண்பது கட்டுண்பதானவிடத்திலே கண்டோம்” என்பது வியாக்கியமான ஸ்ரீஸூக்தி.

English Translation

Damodara, the Lord who was leashed to a mortar, is pleased with servitude, But the heart is not the one serve if told to. Istead it will go on subserving its base karmas claiming, "I am my own" In such a situation, what is it that we can do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்