விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்றே நம் கண்காணும்*  ஆழியான் கார்உருவம்,* 
    இன்றேநாம் காணாது இருப்பதுவும்,*  -என்றேனும்-
    கட்கண்ணால்*  காணாத அவ்உருவை,*  நெஞ்சுஎன்னும்- 
    உட்கண்ணேல் காணும் உணர்ந்து.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என்றேனும் - எக்காலத்திலும்
கண் கண்ணால் - வெளிக்கண்ணாலே
நாணாக - காணக்கூடாத
அவ்வுருவை - அப்படிப்பட்ட விலக்ஷணமான திருவுருவத்தை
நெஞ்சு என்னும் உன் கண் உணர்ந்து  காணுமேல் - நெஞ்சாகிற அகக்கண் விகஹித்து ஸாக்ஷாத்கரிக்குமாகில்,

விளக்க உரை

ஆழியான் காருருவம் அன்றே நம் கண் காணும் = நெஞ்சென்னுமுட்கண் காணுமேல் அன்றே ஆழியான் காருருவத்தை நம் கண் காணும்; நாம் காணாதிருப்பதுவும் இன்றே = நெஞ்சென்னுமுட்கண் காணப்புகாமையால் இன்று நாம் காணாதிருக்கின்றோம். கட்கண்ணால் = கண் என்று உலகத்தில் ஸாமாந்யமாக வ்பவஹரிக்கப்படுகிற கண்ணாலே என்றபடி. இந்த மாம்ஸசக்ஷஸ்ஸாலே எம்பெருமானுடைய திருவுருவம் காணப்படாது என்னில், “கமலக் கண்ணனென் கண்ணினுள்ளான்” “என் கண்ணனை நான் கண்டேனே” ‘தேவர்கட்கெல்லாங் கருவாகிய கண்ணனைக் கண்டுகொண்டேனே” என்றிப்படி பலகாலும் கண்டதாகத் திருவாய்மொழியில் ஆழ்வார் அருளிச்செய்வானேன்? என்றால், அவயிடங்களெல்லாம் மாநஸஸாக்ஷாத்காரத்தையே சொல்லுகின்றனவாகையால் ஒரு குறையுமில்லை. “கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள் நின்றிறுதி கண்டேனென்ற பத்தும் உட்கண்ணாலேயாய” என்று ஆசர்யஹ்ருதய முடிவில் அருளிச் செய்ததுகாண்க. அகக்கண் எனப்படுகிற ஞானக்கண் விகஸிக்கப்பெற்றவர்கள் புறக்கண்ணாலும் பரம்பொருளைக் காணவரல்லராவர் என்பர் சிலர். அங்ஙனன்றி எம்பெருமான் தன்னுடைய விருப்பத்தாலே பரிக்ரஹித்துக் கொள்ளுகிற திவ்யமங்கள விக்ரஹம் மாத்திரம் பரமபக்தர்களுடைய புறக்கண்ணுக்குப் புலப்படுமேயன்றி அவனுடைய திவ்யாத்மஸ்வரூபம் ஒருகாலும் புறக்கண்ணுக்குப் புலப்படாதென்பர் பெரியோர். இப்பாட்டில் “அன்றே நம் கண்காணும்” என்கிறாரே, இங்குக் கண் என்றது புறக்கண்ணோ அகக்கண்ணோ? என்னில்; புறக்கண் என்று கொள்க. அகக்கண் திறந்து திவ்யாத்ம ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கப் பெற்றோமாகில் பின்பு புறக்கண்ணாலே திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவிக்கப் பெறுவோம் என்பதே இப்பாட்டின் கருத்தாகக் கொள்ளத்தக்கது.

English Translation

The Lord can never be seen by these eyes, but that is only now. When the inner eye called heart contemplates on his form and realise hm, these eyes will also begin to see our discus-Lord's dark form.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்