விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சிந்துரப்-பொடி கொண்டு சென்னி அப்பித்*  திருநாமம் இட்டு அங்கு ஓர் இலையந்தன்னால்* 
    அந்தரம் இன்றித் தன் நெறி பங்கியை*  அழகிய நேத்திரத்தால் அணிந்து* 
    இந்திரன் போல் வரும் ஆயப்பிள்ளை*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேல் என்ன* 
    சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்*  துகிலொடு சரிவளை கழல்கின்றதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சிந்துரம் பொடி கொண்டு - ஸிந்தூர சூர்ணத்தைக் கொணர்ந்து;
தன் - தன்னுடைய;
சென்னி - திருமுடியிலே;
சிப்பி - அப்பிக்கொண்டும்,;
அங்கு - திருநெற்றியில்;

விளக்க உரை

“இலையந்தன்னால்” என்றவிடத்து, அம் - சாரியை. அன்றிக்கே, “இலயந்தன்னால்” என்று பாடமாகில், இல் அயம் எனப்பிரித்து, இல் என்று உள்ளாய், “அயமென்ப நீர் தடாகம்” என்ற நிகண்டின்படி அயம் என்று ஜலமாய், ஓர் இலயமென்றது திருப்பவளத்துக்குட்பட்டதொரு ரஸமென்றபடியாய், சிந்துரப் பொடியை அதராம்ருதத்தினால் நனைத்துக் குழைத்து அதைத் திருநாமமாகச் சாத்தி என்றுபொருள்கொள்க. அன்றிக்கே, “இலயந்தன்னால் வருமாயப்பிள்ளை” என இயைத்து, “இலயமே கூத்துங் கூத்தின் விகற்பமுமிருபேரென்ப” என்ற நிகண்டின்படி ‘கூத்தாடிக் கொண்டு வருகின்ற’ என உரைத்துக்கொண்டே கூட்டுப்பொருள் கோளாகக் கொள்வாருமுளர்; இப்பொருளில் நேரியதாய் நீண்டு ஒட்டினவிடத்திலே பற்றும்படி இளையதாய் நிறத்திருப்பதொரு இலையைத் திருநெற்றியிலே திருநாமமாக இட்டனனென்க. இரண்டாவது யோஜனையில், “சிந்தூரப்பொடிக்கொண்டு” என்பதை மீண்டுங் கூட்டிக் கொள்க. கீழ் ஆறாம்பாட்டில் சிந்தூரப்பொடியைத் திருநெற்றியில் திலகமாகச் சாத்தினபடி சொல்லிற்று; இப்பாட்டில் அதனைத் திருக்குழல்மேல் அலங்காரமாகத் தூவினபடி சொல்லுகிறதென்று வாசிகாண்க. ‘கண்ணபிரான் வரும்வழியில் எதிர்நோக்கி நின்று அவனைக் காமுற்றுத் தம்மனோரதத்தின்படி அவனோடு பரிமாறப்பெறாமல் உடனே உடவிளைத்து வளைகழலப்பெற்றார் பலருண்டு; அவர்களைப் போல் நீயும் வளையிழவாதேகொள்’ என்று என் மகளை நோக்கி நான் முறையிடச் செய்தேயும்’ அவள் அப்பேச்சைப் பேணாமல் அவ்வழியில் நின்று துகிலையும் வளையையுந் தோற்றுத் தவிக்கின்றாளென்று ஒருத்தியின் தாய் இரங்குகின்றாள். சந்தி - ???; பலர் கூடுமிடம். கண்டீர் - முன்னிலையசை. “நங்கை சரிவளை கழல்கின்றாள்” என்ன வேண்டியிருக்க, “கழல்கின்றது” என அஃறிணையாகக் கூறியது - வழுவமைதி; சரிவளை கழலப்பெற்றவாறு என்னே! என்று முரைக்கலாம்.

English Translation

The cowherd lad comes like Indra, with Sindoor on his hairline, and a forehead mark drawn with the rib of a palm-leaf around it, his dense dark curls gathered and adorned with peacock feathers. I cautioned my daughter not to stand in his way, lest she lose her bracelets. Alas, she stood alone of the cross roads; her dress and bangles have loosened.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்