விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சென்றுஅங்கு வெம்நரகில்*  சேராமல் காப்பதற்கு,* 
    இன்றுஇங்கு என் நெஞ்சால் இடுக்குண்ட,*-அன்றுஅங்குப்-
    பார்உருவும்*  பார்வளைத்த நீர்உருவும்*  கண்புதையக்,- 
    கார்உருவன் தான் நிமிர்த்த கால்.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - முன்பு மாவலியால் உலகம் நெருக்குண்ட காலத்தில்
அங்கு - அந்த மாவலியின்யாக பூமியிற் சென்று
பார் உருவும் - பூமியாகிறஸ்துவும்
பார் வளைத்த நீர் உருவும் - அந்த பூமியைச் சூழ்ந்து கிடக்கிற ஜலதத்துவமும்
கண் புதைய - மறையும்படி

விளக்க உரை

எம்பெருமானுடைய உலகளந்த சேவடியானது தானாகவே வந்து தம்முடைய திருவுள்ளத்தில் குடிகொண்ட தென்கிறார். அன்று அங்குப் பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதையக் காருருவன் தான் நிமிர்த்த கால் இன்று இங்கு என்னெஞ்சா லிடுக்குண்ட; (ஏதுக்காக வென்னில்;) அங்கு வெந்நரகிற் சென்று சேராமல் காப்பதற்கு. “ஒண்மிதியில் புனலுருவி யொருகால் நிற்ப ஒருகாலும் காமரு சீரவுணனுள்ளத் தென்மதியுங் கடந்து அண்டமீது போகி இருவிசும்பினூடு போயெழுந்து, மேலைத் தண்மதியுங் கதிரவனுந் தவிர வோடித் தாரகையின் புறந்தடவியப்பால் மிக்கு, மண்முழுது மகப்படுத்து நின்றவெந்தை” (திருநெடுந்தாண்டகம்-5) என்றபடி ஸகல லோகங்களையும் ஆக்கிரமித்து நின்ற திருவடிகள் இன்று என்னுடைய நெஞ்சினுள்ளே வந்து சேர்ந்து நெருக்குண்டிரா நின்றது. எல்லாவுலகங்களையும் அளரவின திருவடிகள் எவ்வளவு பெரிதாயிருக்க வேண்டும்; சிறியேனுடைச் சிந்தையானது அவை அடங்குவதற்குப் போதுமான இடமன்றாகிலும் ‘நெருக்குப் பட்டாகிலும் ஆழ்வார் நெஞ்சினுள்ளே இருந்திட வேண்டியது’ என்ற ஸங்கல்பத்தினால் அப்பெருமான் அப்பெரிய திருவடிகளை இந்த நெஞ்சினுள் கஷ்டப்பட்டுப் புகுவித்து நிற்கின்றான்; இப்படி செய்தருளாவிடில் நான் நற்கதிபெற்று உஜ்ஜீவிக்க வழியில்லையாகையால் என்னுடைய உஜ்ஜீவநார்த்தமாகவே இவ்வளவு காரியம் செய்தான் என்கிறார். நரகு = நரகம் என்ற வடசொல் விகாரம். கும்பீபாகம், ரௌரவம் முதலிய கொடிய நரகங்களைக் கருதி வெந்நரகு என்கிறார். *** யஸ் த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயா விநா” (எம்பெருமானோடு கூடியிருக்கை ஸ்வர்க்கம்; அவனை விட்டுப் பிரிந்திருக்கை நரகம்) என்றபடி நான் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக்கூடாதென்று திருவுள்ளம் பற்றித் தனது திருவடிகளை என்னெஞ்சினுள் அமைத்தான் என்னவுமாம்.

English Translation

Then in the yore the Dark-Hued lord extended his feet and covered the Earth and ocean in his stride. Today my heart has fitted those feet into itself, to ensure that we do not enter hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்