விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சீரால் பிறந்து*  சிறப்பால் வளராது,* 
    பேர் வாமன்ஆகாக்கால் பேராளா,*-மார்புஆரப்-
    புல்கி நீ உண்டுஉமிழ்ந்த*  பூமி நீர் ஏற்புஅரிதே?* 
    சொல்லுநீ யாம்அறிய சூழ்ந்து.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பேராளா - ‘மஹாநுபாவனான பெருமானே!
சீரால் பிறந்து சிறப்பால் வளராது - சிறப்புடன் பிறப்பதையும் சிறப்புடன் வளர்வதையும் செய்யாமல்
பேர் வாமன் ஆகாக்கால் - திருநாமம் வ மானென்று வைத்துக் கொள்ளாமலிருந்தால்
யாம் அறிய - இவ்விஷயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
நீ சூழ்ந்து சொல்லு - நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.

விளக்க உரை

இப்பாசுரத்தின் தாம்பரியத்தைத் திருவுள்ளம் பற்றி ஆழ்வான் ஸுந்தரபஹுஸ்தவத்தில் அருளிச் செய்துள்ள ச்லோகம் ***- (க்ஷிதிரியம் ஜநிஸம்ஹருதி பாலகை: நிகிரணோத்கிரணோத்தரனை ரபி- வநகிரீச! தவைவ ஸதீ கதம் வரத வாமந! பிக்ஷணமர் ஹதி?) என்பதாம்; இப்பூமியைப் படைப்பவனும் நீ; துடைப்பவனும் நீ; காப்பவனும் நீ; பிரளயத்தில் திருவயிற்றில் வைத்து நோக்குபவனும் நீ; பிறகு வெளிநாடுகாணப் புறப்பட விடுமவனும் நீ; ஆகையாலே உனக்கே உடைமையா யிராநின்ற இந்தப் பூமியை நீ பெற வேண்டிப் பிச்சை யெடுத்தது எங்ஙனே? என்று திருமாலிருஞ்சோலையழகரை நோக்கி விண்ணப்பஞ் செய்த ச்லோகம் இது. அதிமாநுஷஸ்தவத்திலும் இங்ஙனே ஒரு ச்லோக முண்டு; அதாவது- ***- = த்வந்நிர்மிதா ஜடாகாச தவ த்ரிலோகீ கிம் பிக்ஷணாதியம்ருமே பவதா துராபா? மத்யே ததாது நவிசக்ரமிஷேஜகச் சேத் த்வத்விக்ரமை: கதமிவ ச்ருதி ரஞ்சி தாஸ்யாத்” என்பதாம். கீழ் எடுத்துக் காட்டிய ஸுந்தரபாஹு ஸ்தவச்லோகத்தின் பொருளை இந்த ச்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அடக்கி, உத்தரார்த்தத்தால் அதற்கு ஸமாதாநமருளிச் செய்கிறார். குள்ளவடிவைக் கொண்டு முதலில் யாசித்துப் பிறகு பெரிய வடிவெடுத்து த்ரிவிக்ரமனாக நீ வளர்ந்திராவிடில் உன்னடைய விக்ரமங்களாலே வேதம் எப்படி அலங்கரிக்கப்படும்; ***- த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய” என்றும் ***- “த்ரிர் தேவ; ப்ருதி வீமேஷ ஏதாம்” என்றும் உலகளந்த சரிகையைப் பேசி வேதம் புனிதமாவதற்காகவே நீ வாமநாவதாரம் செய்வதேயன்றி, வேறு வழியால் பூமியை மாவலியிடத்தில் நின்றும் மீட்டுக்கொள்ள முடியாமல் செய்தாயல்லை; பெரும்பாலும் பகவத் பக்தர்களுக்கு உபயோகமில்லாத விஷயங்களையே (யஜ்ஞயாகம் முதலிய காமபகருமங்களையே) விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டு போகிற வேதத்தில் இந்த பவித்திரமான சரித்திரத்தைப் பற்றின பேச்சு வருவதற்காகவே நீ வாமனனானாய் போலும் என்கை. வேதத்தில் த்ரிவிக்ரமாவதாரத்தைப் பற்றிச் சொல்லிற்றேயொழிய வாமாவதாரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே; வாமநனாகப் பிறந்து பிச்சை யெடுப்பானேன் என்ற கேள்விக்கு இது எங்ஙனே ஸமாதாநமாகுமென்னில்; . “நீளவான் குறளுருவாய் நின்றிரந்து மாவலிமண், தாளாலளவிட்ட” ( பெரிய திருமொழி 11-7-2) என்ற திருமங்கையாழ்வாரருளிச் செயலில் “நீள்வான் குறுளுருவாய்” என்று- த்ரிவிக்ரமனாக நீள்வதற்காகவே குறளுருவெடுத்ததாகச் சொல்லுகையாலே வாமாநாவதாரம் திர்விக்ரமாவாதாரத்திற்கு சேஷ பூதமாயிற்றாதலால் இது ஸமாதானமாகக் குறையில்லையென்க. “பேர்வாமனா காக்கால்... பூமிநீரேற்பரிதே?” என்று இங்கு எம்பெருமானை நோக்கி ஆழ்வார்கேட்ட கேள்விக்கே கூறத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில் மேல் விவரித்தவண்ணம் ஸமாதநமருளிச் செய்தாரென்றுணர்க.

English Translation

OO Benevolent Lord! Even if you had not taken an exalted birth, grown up in opulence and appeared as a bachelor boy come for a gift, would it have been difficult for you to take the Earth? –which you did embrace to your chest, swallow and remake on earlier occasions? Pray tell me that I may be convinced.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்