விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உழந்தாள் நறுநெய்*  ஒரோர் தடா உண்ண*
  இழந்தாள் எரிவினால்*  ஈர்த்து எழில் மத்தின்*
  பழந்தாம்பால் ஓச்ச*  பயத்தால் தவழ்ந்தான்**
  முழந்தாள் இருந்தவா காணீரே*
        முகிழ்முலையீர் வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உழந்தாள் - (நெய் முதலியவற்றை) பிரயாஸப்பட்டுத் தடாவிலே சேர்த்த யசோதையினுடைய;
நறு நெய் - மணம் மிக்க நெய்யை;
ஒரோ தடா - ஒவ்வொரு தடாவாக;
உண்ண - (கண்ணன்) அமுதுசெய்த வளவில்;
இழந்தாள் - (பிள்ளையைத்) தான் இழந்தவளாக நினைத்த யசோதை;

விளக்க உரை

உரை:1
 
உழந்து உழந்து (நிறைய வேலை செய்து) சேர்த்து வைத்த நறுமணம் மிக்க நெய்யை ஒரு பெரும் பானை நிறைய கண்ணன் உண்ண, பானை நெய்யையும் விழுங்கினானே இவன் என்னாவான் என்று பயந்து அவனை இழுத்து வைத்து அழகிய மத்தைக் கடையும் பெரிய தாம்புக்கயிற்றால் அவனை அடிப்பதற்காக ஓங்க அதைக் கண்டு பயத்தாலே தப்பிச் செல்வதற்காகத் தவழ்ந்த இந்தக் கண்ணனின் முழங்கால்களின் அழகைக் காணுங்கள்; முகிழ்த்த முலையுடைய பெண்களே வந்து காணுங்கள்.
 
உரை:2

கீழ்ப்பாட்டிற்போல இப்பாட்டிலு உழந்தாள் என்றதும் இழந்தாள் என்றதும் - தன்மையில் வந்த படர்க்கை. ச்ரமப்பட்டுக் கறந்து காய்த்துத் தோய்த்துக் கடைந்து வெண்ணையாக்கி யுருக்கித் தடாக்களிலே நான் சேர்த்து வைத்திருந்தேன். அந்த நெய்யை ஒவ்வொரு தடாவாக ஒன்றும் மிச்சமாகாதபடி இவன் வாரியுண்டான். இவ்வளவு நெய்யை வாரியுண்டால் ஜரிக்கமாட்டாதே!’ என்கிற வயிற்றெரிச்சலாலே கையைப் பிடித்திழுத்து, மத்திலே சுற்றிக் கடைந்து பழகின தாம்பாலே அடிப்பதாக நான் ஓங்க, பயத்தாலே அதைத் தப்புவதாகத் தவழ்ந்தான்; இப்படிப்பட்ட இவனுடைய முழந்தாள்கள் இருக்கும்படியைப் பாருங்கள் என்கிறாள். இனி, தன்மையில் வந்த படர்க்கையாகக் கொள்ளாமல் படர்க்கையாகவே கொண்டு, பெரியாழ்வார் தாமான தன்மையில் அருளிச்செய்கிற ரென்னவுமாம். இழந்தாள் - பிள்ளையை இழந்ததாக நினைத்தவளென்கை; இவ்வளவு நெய்யை வாரியுண்ட பிள்ளை பிழைக்கப் போகிறானோ என்று அஞ்சினள்போலும். பயம் - வடசொல்.

English Translation

Full breasted Ladies, come here and see the beautiful knees of this child. He ate he butter from every pot, so painstakingly collected by his unfortunate mother, and incurred her wrath. When she pulled him up and threatened him with a churning rope, he cringed away in fear!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்