விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல்*  திருத்திய கோறம்பும் திருக்குழலும்* 
  அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ்*  வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச*
  அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை*  அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில்* 
  பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப்* பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ !*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தோழீ - வாராய் தோழீ!
தன் - தன்னுடைய;
திருநெற்றி மேல் - திருநெற்றியில்;
சிந்துரம் - சிந்தூரமும்;
திருத்திய - (அதன்மேல்) ப்ரகாசமாகச் சாத்தின;

விளக்க உரை

கண்ணபிரான் பக்கல் தான் விசேஷ வ்யாமோஹங்கொண்டு அவனைப் பிரிந்து தரிக்கமாட்டாதிமிருக்க, அவனால் மிகவும் உபேஷிக்கப் பெற்ற ஒரு ஆய்ச்சியின் பாசுரம் இது. அலரங்கார வகைகளை அழகுபெற அமைத்துக் கொண்டு பீலிக்குடைகளின் நிழலிலே தோழன்மாருடன் தடிவீசுகை என்ற விளையாட்டைச் செய்துகொண்டு வருகின்ற இக்கண்ணபிரான் தன்னையொழியச் செல்லாத என் தன்மையையும் என்னையொழியச் செல்லும்படியான தன் தன்மையையும் தானறிந்துளனாகில் இத்தெருவழியே வருவதற்குத் தனக்கு யோக்யதையில்லை; ஆயிருக்கச் செய்தேயும் அவன் மானங்கெட்டு இவ்வீதியில் வரப்போகிறன்; அப்போது எவ்வகையினாலாவது நாம் அவனுடைய உபேக்ஷையை விலக்கிக்கொள்வோம்; அதாவது –‘(நேற்று) நாங்கள் தோழிமாருடன் பந்தாடிக் கொண்டிருக்கையில் இவன் சடக்கெனப்புகுந்து அப்பந்தை அபஹரித்துக்கொண்டு கள்ளன்போல ஓடிப்போய்விட்டான், அதை இப்போது தந்தாலொழிய இவனைக் கால்பேரவொட்டோம்’ என்றாற்போலச் சில ஸாஹஸோந்திகளைச் சொல்வோமாகில், அவன் திடுக்கிட்டு நிற்பன், ‘இதென்ன ஸாஹஸம்!’ என்று வியந்து சிரிக்கவும் சிரிப்பன், இவ்வழியால் அவ்வழகையெல்லாம் நாம் காணப்பெறலாம் என்று சொல்லி மகிழ்கின்றாள். சிந்துரம் - ???ம். முழவம் = மத்தளம். “அதினுடைய முழக்கம் ?????மாய்க்கிடக்கிறது” என்ற ஜீயருரை காணத்தக்கது. இரண்டாமடியிறுதியில், வீசா = ‘செய்யா’ என்னும் வாய்ப்பாட்டு உடன்பாட்டிறந்தகால வினையெச்சம். வீசி என்றபடி. அந்தம் - ??? ஆயர் + பிள்ளை = ஆயப்பிள்ளை. வீதி - வீயீ, போதும் - ‘போதரும்’ என்ற வினைமுற்றின் விகாரமென்பர்.

English Translation

With a bright red mark on his forehead, wearing a headband over low-hanging curls, amid the din of pipes and drums under the shade of a forest of parasols, the limitless cowherd-lad comes with his cowherd friends, twirling his curved grazing staff in the air, Sister, Knowing full well, if he enters this street, we will stop him saying he took our ball, and enjoy his coral red lips and his sweet smile!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்