விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புகழ்வோம் பழிப்போம்*  புகழோம் பழியோம்* 
    இகழ்வோம் மதிப்போம்*  மதியோம் இகழோம்*  மற்று-
    எங்கள் மால்! செங்கண் மால்!*  சீறல்நீ, தீவினையோம்* 
    எங்கள் மால் கண்டாய் இவை.  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எம் கண் - எங்களிடத்தில்
மால் - வ்யாமோஹகத்தையுடைய
செம் கண் மால் - புண்டரீகாக்ஷனான பெருமானே,
புகழ்வோம் - (ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்
பழிப்போம் - (அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;

விளக்க உரை

உரை:1

“நற்பூவைப் பூவின்றவண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்” என்று கீழ்ப்பாட்டில், எம்பெருமானைத் துதித்துக் கவிபாடுவதாகத் தொடங்கின ஆழ்வார் “இப்போது நாம் எடுத்துக்கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்; எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்; ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ? எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ? வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக்கடவோம்! ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து, மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது; எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்? சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!; “கேழ்த்த சீர் அரன்முதலாக்கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து, சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல்புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமாபோலே அறிவிற்சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக்காட்டா நிற்க, எமது ஊத்தை வாய்கொண்டு பேசுவது என்னாகும்! “பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?” என்று பலரும் இழிவாக நினைக்கவன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில். புகழ்வோம் பழிப்போம் = திருமாலே! உன்னை நான் புகழ்ந்தேனாகில் பழித்தவனாவேன்; என்னுடைய புகழ்ச்சி உனக்குப் பழிப்பேயாம் என்றபடி. ஆசாரிஹீநனான ஒருபயல் வஸிஷ்டனைப் பற்றிப் பேசத் தொடங்கி ‘வஸிஷ்ட முனிவர் நல்ல ஆசாரசீலர்’ என்று புகழ்வதானது எப்படியோ, அப்படியேயன்றோ குணஹீகனான நீசனேன் குணக்கடலாகிய தேவரீரைப் புகழ்வதும். புகழோம் பழியோம் = நான் தேவரீரைப் புகழாதிருக்க பக்ஷத்தில் பழித்தவாக ஆகமாட்டேன். இவ்வர்த்தம் “புகழ்வோம் பழிப்போம்” என்றதிலேயே கிடைக்கக் கூடுமானாலும் ஸுஸ்பஷ்டமாகச் சொல்ல விரும்பினரென்க. உன் திருநாமத்தையே நான் எடுக்காதிருப்பின் யாதொரு பழிப்புமில்லை யென்றவாறு.

உரை:2

சிவந்த கண்களுடைய எங்கள் திருமாலே உன்னை நாங்கள் புகழ்வோம், புகழமாட்டோம்; பழிப்போம் பழிக்க மாட்டோம்; மதிக்கலாம், மதிக்காமலும் இருக்கலாம். நீ அதற்காக எங்களைக் கோபிக்காதே... (சீறல் நீ) உன்னைச் சரியாக எங்களால் புகழவே முடியாது. இது என்ன தீவினை, இது என்ன பிரேமை..? இந்த சங்கடத்துக்கு காரணத்தை அடுத்த பாடலில் சொல்கிறார்.

English Translation

O Adorable Lord with lotus-red eyes! We may praise or not praise, we may blame or not blame, we may reverse or not revere, we may revile or not revile. Pray do not get angry. Though we are sinners, these are love-offerings, note!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்