விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    முயற்றி சுமந்துஎழுந்து*  முந்துற்ற நெஞ்சே,* 
    இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,* -நயப்புஉடைய-
    நாஈன் தொடைக்கிளவி*  உள்பொதிவோம்,*  நல்பூவைப்- 
    பூஈன்ற வண்ணன் புகழ்  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

புகழ் - திருக்கல்யாணகுணங்களை
நயப்பு உடைய - அன்பு பொதுந்திய
நா ஈன் - நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற
தொடை கிளவியுள் - சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே
பொதிவோம் - அடக்குவோமாக.

விளக்க உரை

உரை:1

ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார். தமது நெஞ்சானது தம்மைவிட்டுத் தனித்துப் போய்விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு; அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார். நெஞ்சு பிரிந்து போய்விட்ட தென்பதும் அதனை அழைத்து வார்த்தை சொல்லுகிறதென்பதும் அஸம்பாவிதமன்றோ? நெஞ்சு போய்விட்டதென்றால் வார்த்தையே சொல்ல முடியாதன்றோ; நெஞ்சு நினைத்ததையன்றோ வாய் சொல்லும்; “முந்துற்ற நெஞ்சே; இயற்றுவாய் எம்மொடு நீகூடி; என்று இப்போது சொல்லுகிற ஆழ்வார் நெஞ்சு அற்றவரென்று எப்படிக் கொள்ள முடியும்? நெஞ்சோடு கூடியிருந்ததுதானே இந்த வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்; அப்படியிருக்க “முந்துற்ற நெஞ்சே!- நீ எம்மொடுகூடி இயற்றுவாய்” என்று அருளிச் செய்வது எங்ஙனே பொருந்தும்? என்று சங்கிக்க வேண்டா; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறபடுத்திச் சொல்லுதல் கவிமா நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுதல் கவிமரபு. நெஞ்சைத் தூது விடுவதாகவுஞ் சொல்லுவர்களிறே. நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள் தருமாஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல் உண்டியே உடையே உகந்தோடு கிறவர்களாயிருப்பதால், உசாந்துணையாவது நெஞ்சு தவிர வேறில்லாமல் அந்த நெஞ்சை நோக்கித்தானே வார்த்தை சொல்ல வேண்டும். “யானும் என்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்” என்று மேலே அருளிச் செய்யப் போகிறார். ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவதென்பது பக்தர்களுக்கு ஒரு நற்போது போக்காக அமைந்ததாம். நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்வதும் அப்படியே; நெஞ்சுவிடுதூதாகச் சொல்வதும் அப்படியே.

உரை:2

எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே முற்பட்டிருக்கிற மனமே நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்) எம்பெருமானுடைய திருக்கல்யாணகுணங்களை அன்பு பொறுந்திய நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே அடக்குவோமாக.

English Translation

O Heart Surging forward with eagerness! Come join me in writing this poem. Together let us weave the glories of lthe hue-of-kaya-flowers-Lord with the string of passionate words issuing from the tongue.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்