விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஊழிதோறு ஊழி ஓவாது*  வாழிய- 
    என்று யாம் தொழ இசையுங்கொல்,*
    யாவகை உலகமும் யாவரும் இல்லா மேல் வரும் 
    பெரும்பாழ்க் காலத்து,*  இரும் பொருட்கு-
    எல்லாம் அரும் பெறல் தனி வித்து,*  ஒருதான்-
    ஆகி தெய்வ நான்முகக் கொழு முளை-
    ஈன்று,*  முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி* 
    மூவுலகம் விளைத்த உந்தி,* 
    மாயக் கடவுள் மா முதல் அடியே? 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

யாவகை உலகமும் - எவ்வகைப்பட்ட லோகங்களும்
யாவரும் - எவ்வகைப்பட்ட பிராணிகளும்
இல்லா - இல்லாமலிருந்த
மேல்வரும் பெரு பாழ் காலத்து -கீழ்க்கழிந்த மஹா ப்ரளய காலத்தில்
இரு பொருட்கு எல்லாம் - எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்
பெறல் அருதனி ஒரு வித்து தான் ஆகி- பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க்கொண்டு

விளக்க உரை

(ஊழிதோறூழி) கீழ்ப்பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோரதித்தார், பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார், அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு... உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக் கொண்டிருந்தார்கள், அதைப்பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம், இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக்கொண்டிரா நின்றார்கள். இது மிக அழகாயிராநின்றது இப்படிப்பட்ட போதுபோக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு, அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில். யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும் எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார். “பன்மைப் படர் பொருளாதுமில்பாழ் நெடுங்காலத்து நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மைமயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம் இங்கு ‘அநுஸந்திக்கத்தகும். சேதந வர்க்கங்களிலும் அசேதநவர்க்கங்களிலும் ஒன்றுமில்லாதபடி மஹாப்ரளயங் கோத்தகாலத்தில், தேவமநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக்கிடப்பவையான ஜீவயஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.

English Translation

In the great deluge when all the worlds and all the gods disappeared, the Lord became the precious seed for all that existed, then sprouted a stalk and created the four-faced Brahma, then the three-eyed Siva and the various gods. Will we experience the joy of relentlessly praising the wonder-lord, the lord with lotus on his navel that made all the worlds, through age after age?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்