விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  குறிப்பில் கொண்டு நெறிப்பட,*  உலகம் 
  மூன்று உடன் வணங்கு தோன்று புகழ் ஆணை* 
  மெய் பெற நடாய தெய்வம் மூவரில்- 
  முதல்வன் ஆகி*  சுடர் விளங்கு அகலத்து* 
  வரை புரை திரை பொர பெரு வரை வெருவர,* 
  உரும் முரல் ஒலி மலி நளிர் கடல் பட அரவு- 
  அரசு உடல் தட வரை சுழற்றிய,*  தனிமாத்-
  தெய்வத்து அடியவர்க்கு இனி நாம் ஆளாகவே- 
  இசையுங்கொல்,*  ஊழிதோறு ஊழி ஓவாதே?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மூன்று உலகம் - மூவுலகங்களும்
நெறிபட - நல்வழிபடிதந்து உஜ்ஜிவிக்கும் படியாக
குறிப்பில் கொண்டு - திருவுள்ளம்பற்றி,
உடன்வணங்கு தோன்று புகழ் - அவ்வுலகங்களெல்லாம் ஒன்று சேர்ந்து வணங்கப்பெற்றமையால் ப்ரஸித்தமான கீர்த்தியையுடையனாய்
ஆணை மெய் பெறநடாய் - தனது ஆஜ்ஞையைத் தடையின்றிச் செலுத்துமவனாய்
தெய்வம் மூவில் முதல்வன் ஆகி - மூன்று மூர்த்திகளுக்குள்ளே ப்ரதானனாய்

விளக்க உரை

(குறிப்பில்கொண்டு) பகவத்பக்தியைப் பற்றிப் பேசினார் கீழ்ப்பாட்டில் பகவானோடு நின்றுவிடாமல் பாகவதாளவுஞசென்று பக்திபண்ணுகை ஸ்வரூபமாதலால் அப்படிப்பட்ட பாகவதபக்தி நமக்கு இனி ஒருநாளும் வழுவாமல் சாச்வதமாக உண்டாகக் கூடுமோவென்று அந்த நிஷ்டையில் தமக்குண்டான அவாவை வெளியிடுகிறார் இதில். குறிப்பில்கொண்டு என்று தொடங்கித் தனிமாத் தெய்வம் என்னுமளவும் எம்பெருமானுடைய ஸ்வரூபஸ்வபாவங்களைச் சொல்லுகிறார். உலகம் மூன்ற நெறிப்படக் குறிப்பில் கொண்டு உடன்வணங்கு தோன்றுபுகழ் – தன்னாலே படைக்கப்பட்ட மூவுலகங்களும் தீவழியில் செல்லாமல் நல்வழியில் படிந்து உஜ்ஜிவிக்கவேணுமென்று திருவுள்ளம்பற்றி அப்படியே அவை நல்வழிபடிந்து தன்னை வணங்க அதனால் எங்கும் பரந்த புகழையுடையவன் என்கிறது. ஆணை மெய்பெற நடாய – ஆணையாவது ஆஜ்னஞ, எம்பெருமானுடைய ஆஜ்ஞையாவது சாஸ்த்ரம், * ச்ருதி ஸ்மருதிர் மமைவாஜ்ஞா யஸ்தாமுல்லங்கய் வர்த்தசே – ஆஜ்ஞாச்சேதீ மமத்ரோஹீ மத்பக்தோபி ந வைஷ்ணவ * என்று எம்பெருமான்தானே அருளிச்செய்திருக்கிறபடி ச்ருதிஸ்ம்ருதிகள் முதலிய சாஸ்த்ரங்களாகிற திவ்யாஜ்ஞையைத் தடையின்றி எங்கும் நடத்துபவன் என்கை. * “கலைகளும் வேதமும் நீதிநூலும் கற்பமும் சொற்பொருள்தானும், மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும் நீர்மையினால் அருள்செய்து“ என்றபடி தன்னாலே அளிக்கப்பட்ட சாஸ்த்ரங்கள் பழுதுபடாதபடி அவற்றை உலகில் நன்கு பிரசார் செய்விப்பவன் என்றாவறு.

English Translation

The supreme Lord without a peer churned the deep Ocean of Milk, with a thundrous roar that shook the mountains, using the king of snakes Vasuki, rolled over the mighty mountain Mandara. He has a radiant chest. He is the first-cause of the Tirmurti. He rules over the worlds justify with great fame, and is worshipped by the three worlds. At least now, will we not be servants to his devotees, through age after age?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்