விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சுற்றி நின்று ஆயர் தழைகள் இடச்*  சுருள்பங்கி நேத்திரத்தால் அணிந்து* 
    பற்றி நின்று ஆயர் கடைத்தலையே*  பாடவும் ஆடக் கண்டேன்*  அன்றிப் பின்- 
    மற்று ஒருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்*  மாலிருஞ்சோலை எம் மாயற்கு அல்லால்* 
    கொற்றவனுக்கு இவள் ஆம் என்று எண்ணிக்*  கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஆயர் - இடைப்பிள்ளைகள்;
சுற்றி நின்று - (தன்னைச்) சூழ்ந்துகொண்டு;
தழைகள் - மயில்தோகைக் குடைகளை ;
இட - (தன் திருமேனிக்குப் பாங்காகப்) பிடித்துக்கொண்டுவர,;
சுருள் பங்கி - (தனது) சுருண்ட திருக்குழல்களை;

விளக்க உரை

“மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்ற உறுதியுடன் நின்ற ஆண்டாளைப் போன்ற ஆய்ச்சி இவள். இடைப்பிள்ளைகளெல்லாம் தனக்குக் குடைபிடிக்கும்படி வீறுபாடுடைய இக்கணண்பிரானைத் தவிரித்து மற்றொரு சப்பாணிப்பயலுக்கு என்னை உரிமைப்படுத்த நினைத்தீர்களாகில் குடிகெட்டதாம். பிறனொருவனைக் கொண்டு என் கழுத்தில் தாலி கட்டுவித்தாலும் நான் “கொம்மைமுலைக ளிடர்தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல், இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய்ச்செய்யுந் தவந்தானென்?” என்றிருக்குமவளாகையால் அக்கண்ணனிடத்தே பேரவாக்கொண்டு அதற்கேற்பப் பரிமாறப் பெற்றிலேனாகில் சிந்தயந்தியைப் போலே தன்னடையே முடிந்து போவேன்; பிறகு உங்களுக்கு எந்நாளும் மனக்கவலையேயாம் என்று வெட்டொன்று துண்டிரண்டாகச் சொல்லுகின்றாளென்க. (சிந்தயந்தி - ஓர் ஆய் மகளின்பெயர்; இவள் குருஜநத்தின் காவலுக்கு அகப்பட்டுக் கண்ணனைப் பெறமாட்டாமல் இருந்தவிடத்திலேயே உள்ளேயுருகி நைந்து முடிந்துபோயினள்.) பங்கி - ஆண்மயிர்; “பங்கியே பிறமயிர்க்கும் பகரு மாண்மயிர்க்கும் பேராம்” என்றான் மண்டலபுருடன். நே த்திரம் - ???; கண், இங்கு மயிற்கண். கடைத்தலை - தலைக்கடை; சொல்நிலைமாறுதல். மாலிருஞ்சோலையெம் மாயற்கல்லால் = “ ‘கண்ணனுக்கு’ என்னாதே இப்படி சொல்லிற்று இவனுக்கு ஓரடியுடைமை சொல்லுகைக்காக; அடியுடைமை சொல்லும்போது ஒரு ???? (கோத்ர) ஸம்பந்தஞ் சொல்லவேணுமிறே” என்ற ஜீயருரை அறியத்தக்கது (??? ஸம்பந்தம் - பர்வத ஸம்பந்தம் என்று சிலேடை.) கொற்றவனுக்கு = கொற்றம்... ஜயம்; அதையுடையவனுக்கென்றபடி. தன் பொருளைத் தானே கைக்கொள்ளவல்லவனுக்கென்க. அண்ணாந்திருக்கவே ஆங்கவளைக் கைப்பிடித்தவனிறே. கோழம்பம் - குழப்பம்; கலக்கம் என்றவாறு. பெண் மாண்டால் தாய்மார்க்குக் கலக்கமேயன்றோ.

English Translation

Surrounded by cowherds holding parasols, adorning his curly hair with peacock feathers, he stands at the portico of a house singing and dancing. Ladies! After seeing the Wonder Lord of Malirumsolai thus, no more can I hear of being given to anyone else. Say yes, it is fit, and turn me over to the winner or else face chaos.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்