- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
[உலகுபடைத்து.] கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய விலக்ஷணமான திருமேனியழகை அநுஸந்தித்த ஆழ்வார், இப்படி பரமவிலக்ஷணனான எம்பெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்னியிற் சூடவேணும் என்று ஆவல் கொண்டிருப்பதேயன்றோ புருஷார்த்தம்; இவ்வுலகிலுள்ள பாவிகள் இதனை யறியாதே ‘பிள்ளைவேணும் குட்டி வேணும் சேலை வேணும் செல்வம் வேணும்’ என்ரு க்ஷுத்ர பலன்களை யெல்லாம் விரும்பி இவை கொடுப்பாரென்று கண்டவிடமெங்கும் அலைந்து திரிகிறார்களே! அந்தோ! இஃது என்ன கொடுமை! என்று முதலிலே திருவுள்ளம் நொந்து அப்படிப்பட்ட க்ஷுத்ரர்களைப் பற்றி நாம் ஏன் கவலைப்படவேணும்! அவர்கள் இஷ்டப்படி அலைந்துழலட்டும், *உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரைப்பற்றி நாம் சிந்திக்கவே வேண்டா, பகவத்பக்தி தலையெடுத்த மஹான்களும் இப்பூமியின் கண் இருக்கிறார்களன்றோ அவர்களுடைய அத்யவஷஸாயத்தைக் கண்டு நாம் உகப்போம் – என்று பரமபக்தர்களுடைய அந்தரங்க வுறுதியைப் பேசி மகிழ்கிறார் இப்பாட்டில். திருச்சந்த விருத்தத்தில் – “கேடில் சீர் வரத்தனாங் கெடும் வரத்தயனரன், நாடினோடு நாட்ட மாயிரத்தனோடு நண்ணினும், வீடதான போகமெய்தி வீற்றிருந்தபோதிலும் கூடுமாசையல்ல தொன்று கொள்வனோ குறிப்பிலே“ என்று திருமழிசைப்பிரான் அருளிச்செய்த பாசுரத்தைப் பெரும்பாலூந் திருவுள்ளத்திற்கொண்டு இப்பாசுரமருளிச்செய்கிறாரென்பது உய்த்துணரத்தக்கது. எம்பெருமானைக்கிட்டி அநுபவிப்பதிலுங்காட்டில் அவ்வநுபவத்தைப்பற்றின மனோரதமே நித்யமாய்ச் செல்லுமாகில் அதுவே சிறக்குமென்பது ஆழ்ந்த பக்தியுடையவர்களுடைய ஸத்தாந்தம், அதைத்தானருளிச்செய்தார் திருமழிசைப்பிரான். ப்ரஹமலோக ஸாம்ராஜ்யம் கிடைத்தாலும் ருத்ரலோக ஆதிபத்யம் கிடைத்தாலும் இந்திரலோகமாளும் பாக்கியம் வாய்ந்தாலும், பரம புருஷார்த்தமாகிய ஒன்றான பரமபதாநுபவமே கிடைப்பதானாலும் இவற்றையெல்லாம் ஒரு புருஷார்த்தமாகவே மதிக்கமாட்டேன். பின்னே எனக்கு எதிலே ஊற்றமென்றால் ‘எம்பெருமானோடு கூடவேணும் எம்பெருமானோடு சேரவேணும் என்று மனோரதங்கொண்டிருப்பதுண்டே அதுதான் எனக்குப் பரமபோக்யம் என்றார்.
English Translation
The Lord my father made and swallowed the worlds. Those who dearly desire to wear on their heads the flowers of the lord's tinkling lotus feet, with love that consumes the soul, the sweet ambrosial delight that flows from his glory-flood, will they ever, -will the clear thinking souls ever, -desire Moksha, even if it comes with the wealth of the lotus dame, the strength of abiding grace and kingship over the three worlds? Those who do, let them.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்