விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திங்கள் அம் பிள்ளை புலம்ப*  தன் செங்கோல் அரசு பட்ட*
    செங் களம் பற்றி நின்று எள்கு புன் மாலை,*  தென்பால் இலங்கை-
    வெங் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா*
    நங்களை மாமை கொள்வான்,*  வந்து தோன்றி நலிகின்றதே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செம் களம் - செவ்வானமாகிய (ரத்தத்தாற்) சிவந்த போர்க்களத்தை
பற்றி - அடைந்து
நின்று - (நீங்கமாட்டாமல் அங்கு) நின்று
என்கு - வருந்துகிற
புல்மாலை - சிறுமைப்பட்ட மாலைப்பொழுதாகிய பெண்பால்
தென்பால் இலங்கை - தெற்குத் திக்கிலுள்ள லங்காபுரியை

விளக்க உரை

மாலைப்பொழுதுக்கு ஆற்றாத நாயகி இரங்கி யுரைக்கும் பாசுரம் இது. கீழ் “பால்வாய்ப் பிறைப்பிள்ளை” என்ற முப்பத்தைந்தாம் பாட்டின் முன்னடிகளை இப்பாட்டின் முன்னடிகட்கு ஸ்மரிப்பது. இதில் மாலைப்பொழுதை ஒரு மகளாகவும், ஸூர்யனை அவளது கணவனாகவும், சந்திரனை அவர்களது பிள்ளையாகவும் ஸுர்யனது சிவந்த கிரணங்களை அவனது செங்கோலாகவும், அந்த ஸூர்யன் அஸ்தமிப்பதை அக்கணவன் இறந்து போவதாகவும், அவன் அஸ்தமிக்கின்ற திக்கினிடத்தை அவனிறந் விழுந்தொழிந்த போர்க்கலமாகவும், ஸூர்யாஸ்தமாக காலத்து மேற்குத் திக்கில் அவன் கிரணஸம்பந்தத்தால் தோன்றுகிற செவ்வானத்தை அவன் போரில் பட்டு இறக்கும்போது அவனது ரத்தம் தெரித்த இடமாகவும் உருவகப்படுத்தியவாறு. கணவனைப் பிரிந்த இவளுக்கு, கண்ணிற்காணும் பொருளெல்லாம் கணவனை யிழந்ததாகத் தோன்றுதலால் இக்கற்பனை கூறினானென்க. இப்படி கண்டாரிரங்கத்தக்க நிலைமையை யடைந்த மாலைப்பொழுது, ஞாபக முகத்தால் வருத்தப்படுகிற திருத்துழாயைத் துணையாகக்கொண்டு நாயகியை வருத்துதலை, தனது மக்கள் தனிமைப்படத்தன் கணவனையிழந்து வருந்திய தடாகை அகஸ்திய சாபத்தை உதியாகக் கொண்டு முனிவர்களை எதிர்த்து வருந்துதல்போலக் கொள்க.

English Translation

The twilight wife bemoans the death of her husband the noble king sun in the bloody-red battlefied of the West, while the child Moon wails without consolation. The Lord who devastated the Southern Lanka city, Rama, the Lord of celestials, comes to destroy our well being with his Tulasi-garland ally, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்