விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வல்லி நுண் இதழ் அன்ன ஆடை கொண்டு*  வசை அறத் திருவரை விரித்து உடுத்து* 
    பல்லி நுண் பற்றாக உடைவாள் சாத்தி*  பணைக்கச்சு உந்தி பல தழை நடுவே* 
    முல்லை நல் நறுமலர் வேங்கை மலர்- அணிந்து*  பல் ஆயர் குழாம் நடுவே* 
    எல்லியம் போதாகப் பிள்ளை வரும்*  எதிர்நின்று அங்கு இனவளை இழவேன்மினே*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பிள்ளை - நந்தகோபர் மகனான கண்ணன்;
வல்லி - கற்பகக் கொடியினது;
நுண் - நுட்பமான;
இதழ் அன்ன - இதழ்போன்று ஸுகுமாரமான;
ஆடை கொண்டு - வஸ்த்ரத்தைக் கொணர்ந்து;

விளக்க உரை

தோழிமார் ஒருவர்க்கொருவர் சொல்லிக் கொள்ளும் பாசுரம் இது. தோழிகாள்! இவ்வூரில் ஒரு பிள்ளை உளன் என்பது உங்களுக்குத்தெரியுமே, அவன் நல்ல நல்ல ஆடையைச் சாத்திக்கொண்டு கச்சுங் கத்தியுமாகத் தனது தோழன்மாருடன் மஹாஸம்ப்ரமமாக மாலைப்பொழுதாகிய இப்பொழுதிலே இச்சேரியேற வரப்புகாநின்றான்; அவன் வருமழகைக் காணவிரும்பி வழியில் அவனை யெதிர்கொண்டு நின்றவர்களில் ஒருத்தரும் வளையிழவாதாரில்லை; நீங்களாகிலும் ஜாகரூகதையுடனிருந்து உங்கள் கைவளைகளை நோக்கிக் கொள்ளுங்கள் என்று ஒருத்தி தன் தோழிகளுக்கு எச்சரிக்கை கூறுகின்றனனென்க. வளையிழக்கைக்கு அடியென்? என்னில்; ஸாக்ஷாந் மந்மதமந்மதனான அவனைக் கண்ணாற்கண்ட மாத்திரத்திலேயே பெண்களுக்கு விசேஷமான வியாமோஹம் பிறக்கும்; அதற்கு ஏற்றபடி அவனோடு ரமிக்கை அவர்களுக்கு அரிது; அதனால் க்ஷணேக்ஷணே உடல் இளைக்கும்; உடனே கைவளைகள் கழன்றுவிழும் என்றறிக. இனம் - கூட்டம்; முழங்கைவரைக்கும் வளைகளை அடுக்கிக்கொண்டிருப்பர்களிறே. வசைஅற - குற்றம் இல்லாதபடி என்பது பொருள்; ஆடையுடுக்கையில் குற்றமற்றிருக்கையாவது - ஒழுங்குபடச்சாத்துகையேயாட; பல்லிநுண்பற்றாக - இவ்வுடைவாள் கச்சுப்பட்டையுடன் கூடவே பிறந்ததத்தனை யொழிய வைத்துக்கட்டினதல்ல என்று தோற்றும்படிக்கு உவமை யென்க. உடைவாளாவது - அதிகாரி புருஷர்கள் எப்போதும் இடுப்பிலேயே அணிந்து கொண்டிருக்கும் கத்தி.

English Translation

Wearing a petal soft gossamer cloth pleated around his waist, a folded waist-cloth over it that grips like a lizard and a sword stuck into it, the lad comes at dusk in the company of hordes of cowherds in the midst of peacock parasols. Wearing fragrant Mullai and Vengai flowers. Young Ladies! Do not stand in his way lest you lose your paired bangles!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்