விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சூழ்கின்ற கங்குல்*  சுருங்கா இருளின் கருந் திணிம்பைப்,*
    போழ்கின்ற திங்கள் அம் பிள்ளையும் போழ்க,*  துழாய் மலர்க்கே-
    தாழ்கின்ற நெஞ்சத்து ஒரு தமியாட்டியேன் மாமைக்கு இன்று*
    வாழ்கின்ற ஆறு இதுவோ,*  வந்து தோன்றிற்று வாலியதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சூழ்கின்ற - (இடைவிடாது) சூழ்ந்து நிற்கிற
கங்குல் - ராத்ரியினுடைய
சுருங்கா இருளின் - சுருங்காமற் பெருகுகிற இருளினுடைய
கரு திணிம்பை - கறுத்த செறிவை
போழ்கின்ற - விளக்கிற

விளக்க உரை

இவளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு தளர்ந்து உரைத்தல் இது. நாயகனைப் பிரிந்த நிலையில் பகலிற் காட்டிலும் இரவில் இருளில் மிக வேதனைப்படுகிற நாயகி, அப்பொழுது இளம்பிறை தோன்றி அவ்விருளை அழிக்கத் தொடங்கியதை நோக்கி இனி நமக்கு இருளினாலாகுந் துயரம் குறைவுபடுமென்று கருதி ஒருவாறு தணிந்திருக்கத் தொடங்கிய வளவிலே, இளம்பிறையும் விரஹிகளுக்குத் தாபஹேதுவான பொருள்களும் ஒன்றாதலால் அது இவளை இருளினும் அதிகமாக வேதனைப்படுத்த, அது நோக்கி அத்தலைவி இரங்கிக் கூறியதென்க. எனக்குப் பகையாய்ச் சூழ்கிற இருளைப் பிளந்தொழிக்கிற இளம்பிறை அவ்வருளின் ஒழிவுக்கு மகிழ்கிற என்னையும் பிளந்தொழிக்கட்டும். பிறைதோன்றி இருள் அகன்றதைக் கண்டு இனி என் துயரங் குறைந்து இழந்த மாமை நிறத்தைப் பெற்று வாழ்வேனென்று கருதிய எனக்கு அந்தோ! பிறை தோன்றியது இங்ஙனமோ முடிந்தது! என்கிறான். துயர் நீக்க வந்தானென்று கருதப்பட்டவன்தானே துயர¬ மிகுவிக்கின்றானே! என்செய்வேன்! என்கிறாள்.

English Translation

The tender Moon, come to break the pitch darkness of the encircling gloom of night, also breaks my heart. This lonely self has a heart that years for the Tulasi flower alone, Is this the way it is going to be today? Alas, the enemy has emerged stronger.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்