விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாய்த் திருச் சக்கரத்து*  எங்கள் வானவனார் முடிமேல்,*
    வாய் நறுங் கண்ணித்*  தண் அம் துழாய்க்கு வண்ணம் பயலை,*
    வான் மிக வந்து நாள் திங்கள் ஆண்டு ஊழி நிற்க*  எம்மை-
    உளைவான் புகுந்து,*  இது ஓர் கங்குல் ஆயிரம் ஊழிகளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முடிமேல் - திருமுடியிற் சாத்தியுள்ள
தளைவாய் - கட்டுவாய்ந்த
நறு - பரிமளமுள்ள
கண்ணி - மாலைவடிவமான
தண் அம் - குளிர்ந்து அழகிய

விளக்க உரை

இப்பொழுதின் நெடுமைக்குத் தலைவி இரங்கிக் கூறும் பாசுரம் இது. நாயகனைப் பிரிந்து அந்த விரஹஸ்யஸநத்தை ஆற்றாமல் பகலிற் காட்டிலும் இரவில் மிக வருந்தி அரிதிற் சில நாட்களைக் கழித்த நாயகி அவ்வருத்தம் நாளுக்குநாள் அதிகப்படுதலால் இரவும் ஒரு, நாளைக்கொருநாள் மிக நெடுகுவதாகத் தோன்றுதல் பற்றி ‘இதுக்கு முன்பு எனது நிறத்தை’ மாறுபடுத்தும் பொருட்டு ஒரு நாளாயும் ஒரு மாதமாயும் ஒரு வருடமாயும் ஒரு கற்பகமாகவும் படிப்படியாக வளர்ந்து தோன்றி வருந்தி வந்த இருள் இன்றைக்கு என்னை அடியோடு முடிக்கும் பொருட்டு மிகப் பல கற்பகங்களாகத் தோன்றி வருத்துகின்றது’ என்று ஒருநாளிரவிற் கூறியதா மிது. வளைவாய்த் திருச்சக்கரத்து = சங்கையும் கூர்மையான சக்கரத்தையுமுடைய என்று முரைக்கலாம்.

English Translation

Since the time I desired the Tulasi on the crown of our lord who bears the sharp-edged discus, the ruthless day has been casting the yellow hue of paleness on me relentlessly, for months, years and aeons. Above it, this terrible night who entered to wipe me out, extends into a thousands aeons, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்