விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காவியும் நீலமும்*  வேலும் கயலும் பலபல வென்று,*
    ஆவியின் தன்மை அளவு அல்ல பாரிப்பு,*  அசுரைச் செற்ற-
    மாவியம் புள் வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம் சேர்*
    தூவி அம் பேடை அன்னாள்,*  கண்கள் ஆய துணைமலரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அசுரை - அசுரர்களை
செற்ற - அழித்த
மா விய புள் வல்ல - பெரிய ஆச்சர்யகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற
மாதவன் - திருமகன் கணவனும்
துணை மலர் - ஒன்றொடொன்று ஒத்த இரண்டு தாமரை மலர்கள்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் தலைமகள் கழற்றெதிர் மறுத்துரைத்து வருந்துவதைக் கண்ட தோழன் ‘ஒருகாலும் கலங்க கடவதல்லாத உனது உள்ளம் இங்ஙனே கலங்குவதற்குக் காரணம் என்னோ?’ என்று தலைவனுக்குக் கூற, அதற்குத் தலைவன் தன் ஆற்றாமையுணர்த்தியதுஇது. யான் திருவேங்கட மலையிற் கண்ட மங்கையின் கண்கள் வருத்தத் தொடங்கிய அளவுக்கு என் உயிர் ஓர் ஈடாகாதென்று தலைமகன் தன் வலியிழந்தமையைப் பாங்கனுக்குக் கூறி வருந்துகிறானாயிற்று. அசுரர்களையழித்த பெரிய ஆச்சரியகரமான கருடப்பறவையை ஏறி நடத்துகிற திருமாலின் திருப்பதியாகிய திருவேங்கட மலையிலே மலர்போன்ற கண்களானவை உத்தம லக்ஷணமாகிய ரேகைகளின் செம்மையால் செங்கழுநீரையும் கருநிறத்தால் நீலோற்பல மலரையும், கூர்மையாலும் ஒளியாலும் வருத்துதலாலும் வேலாயுதத்தையும், குளிர்ச்சியாலும் வடிவத்தாலும், கயல்மீனையும், மற்றும் மருட்சி முதலியவற்றால் மற்றுங் கண்ணுக்கு ஒப்பாகின்ற மான்விழி முதலிய மிகப் பல பொருள்களையும் தமக்கு ஒப்பாகாதபடி ஜயித்து என்றை வருத்துதற்கு அடிகோலிய பரப்பு எனது உயிரின் தன்மைக்கு ஏற்ற அளல்ல; உயிரின் அளவை மீறிக்கிடக்கின்றது: இந்த மெல்லிய உயிரை மாய்ப்பதற்கு இத்தனை பெரிய முயற்சி கொள்ளத் தேவையில்லை என்றவாறு.

English Translation

She is like a beautiful swan from the hills of Venkatam, the abode of the lord Madhava, Govinda, the bird rider who slays Asuras. Her perfectly matching eyes easily win over lotuses, blue waterlilies, speakers and fishes in their various ways. Her gaze is more than this soul can bear!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்