விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருக்கு ஆர் மொழியால்*  நெறி இழுக்காமை,* உலகு அளந்த-
    திருத் தாள் இணை நிலத்தேவர் வணங்குவர்,*  யாமும் அவா-
    ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனி இன்மையின்* 
    கருக்காய் கடிப்பவர் போல்,*  திருநாமச் சொல் கற்றனமே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிலம் தேவா - பூமிதேவர்களாகிய பிராமணர்கள்
இருக்கு ஆர் மொழியால் - வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு
நெறி இழக்காமை - முறைமை தவறாமல்
உலகு அளந்த திருதால் துணை வணங்குவர் - உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:
யாமும் - நாமும்

விளக்க உரை

நாயகியானவள் நாயகனுடைய பேர்கூறித் தரித்திருப்பதைத் தோழிக்குக் கூறுதல் இது. ஸம்ச்லேஷித்துப் பிரிந்த நாயகியானவள் மீண்டும் ஸம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமையினாலே தான் ஒருவாறு தரித்திருப்பதற்காக நாயகனுடைய நாமங்களைச் சொல்லிக்கொண்டு போது போக்குத லென்பதொன்றுமுண்டு; அது நிகழ்கின்ற தென்க. புண்யசாலிகளான ப்ராம்ஹ்மணோத்தமர்கள் வேதமந்திரங்களால் எப்பொழுதும் எம்பெருமானைத் தவறாமல் அடைந்து அநுபவிப்பர்; யானோ அப்படிப்பட்ட நல்வினையில்லாமையால் எனது ஆசையை அடக்கமாட்டாமல் எனது தௌர்ப்பாக்யத்தை நொந்து கொண்டு இனிய பழங்களை உண்டு வாழப்பெறாத ஏழையர் காய்களைக் கடித்து உயிர் வாழுமாபோலே அவனது பூர்ணாநுபவம் பெருமையால் நமோச்சாரணஞ் செய்து உயிர் தரிக்கின்றேனென்கிறாள். ‘தருக்காய் கடிப்பர்போல்’ என்று உபமானத்தினால் இத்திருநாமச்சொல் கற்பதிலுள்ள அத்ருப்தி விளங்கும். கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப்பட்டவர்க்குத் திருநாமச்சொல் கற்ற மாத்திரத்தால் என்னாகும்?

English Translation

The Vedic seers, -gods on Earth, -offer worship to the Earth-measuring lord with proper chants from the Rig Vedas. We too, with deep regret for our sins and ourselves the sinners, came forward with that desire. But like late fruit pickers who have to be content to bite raw fruit, we must recite his names alone and be satisfied.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்