விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்*  தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி* 
    குழல்களும் கீதமும் ஆகி*  எங்கும்- கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு* 
    மழைகொலோ வருகின்றது என்று சொல்லி*  மங்கைமார் சாலக வாசல் பற்றி* 
    நுழைவனர் நிற்பனர் ஆகி எங்கும்*  உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே.* (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தழைகளும் தொங்கலும் - பலவகைப்பட்ட மயிற்பீலிக் குடைகள்;
எங்கும் ததும்பி - நாற்புறங்களிலும் நிறைந்து;
தண்ணுமை - ம்ருதங்கங்களும்;
எக்கம் மத்தளி - ஒரு தந்த்ரியையுடைய மத்தளிவாத்யங்களும்;
தாழ்பீலி - பெரிய விசிறிகளும்;

விளக்க உரை

“கலாபந் தழையே தொங்கலென்றிவை, கலாபப் பீலியிற் கட்டிய கவிகை” என்ற திவாகா நிகண்டின்படி, தழையென்றாலும் தொங்கலென்றாலும் மயிற்றோகையாற் சமைத்த குடைக்கே பெயராயினும் இங்கு அவ்விரண்டு சொற்களையுஞ் சேரச்சொன்னது - அவாந்தர பேதத்தைக் கருதியென்க; “தட்டுந் தாம்பாளமுமாக வந்தான்” என்றார்போல. தண்ணுமை - உடுக்கை, உறுமிமேளம், ஓர்கட்பறை, பேரிகை, மத்தளம். எக்க மத்தளி - ‘எக்கம்’ என்கிறவிது ‘ஏகம்’ என்ற வடசொல் விகாரமாய் - ஒரு தந்திக்கம்பியை யுடையதொரு வாத்யவிசேஷத்தைச் சொல்லுமென்க. அன்றிக்கே ‘எக்கம்’ என்று தனியே ஒரு வாத்ய விசேஷமுமாம். தாழ்பீலி = தாழ்தல் - நீட்சி; பீலீ - விசிறிக்கும் திருச்சின்னத்துக்கும் பெயர்; இங்குத் திருச்சின்னத்தையே சொல்லுகின்ற தென்றலும் ஏற்கும். கீதம் - ??.... ம் கோவிந்தன் வருகின்ற கூட்டங்கண்டு - கோவிந்தன் கூட்டமாய் வருகின்றமையைக் கண்டு என்றவாறு. சாலகம் - ஜாàசும் ஊண் - முதனிலை திரிந்த தொழிற்பெயர். கண்ணபிரான் கன்றுமேய்த்து விட்டுத் தன்னோடொத்த நிறத்தனரான ஆயிரந்தோழன்மாருடன் கூடிப் பற்பல பீலிக்குடைகள் விசிறிகள் வாத்தியங்கள் முதலிய ஸம்ப்ரமத்துடன் வருகின்றவாற்றைக் கண்ட யுவதிகள் ‘ இவை மேகங்கள் திரண்டுருண்டு வருகின்றனவோ’ என்று தம்மிலே தாம் சொல்லிக் கொண்டு இவனை இடைவிடாது காண்கைக்காகத் தந்தம்மாளிகைகளில் சுவாக்ஷத்வாரத்தளவிலே நின்று காணலுற்று, கண்ணனுடைய அழகின் மிகுதியைக் காணக்காணப் பரவஸசகளாய், நின்றவிடத்தில் நிற்கமாட்டாமல் சிலர் அபிநிவேசாதிசயத்தால் கண் கலங்கிச் சன்னல் வழியாக வெளிப்புறப்பட முயல்வாரும், சிலர் மாமிமார் முதலியோருக்கு அஞ்சி அவ்விடத்திலேயே திகைத்து நிற்பாருமாய் இப்படி தந்தம் நெஞ்சுகளையிழந்து ஆஹாரவிருப்பத்தையும் மறக்கப் பெற்றார்கள் என்பதாம்.

English Translation

Parasols and umbrellas pop up everywhere; drums one-string lyres, tabors, reed pipes, flutes and songs are resounding everywhere, as Govinda enters with his rout. Maidens come to the windows everywhere saying “Wonder if the rain clouds are setting?” Some creeping out, some standing there, they let their hearts flutter, forgetting even their supper.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்