விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வாசகம் செய்வது நம்பரமே?*  தொல்லை வானவர் தம்-
    நாயகன்*  நாயகர் எல்லாம் தொழும் அவன்,*  ஞாலம் முற்றும்- 
    வேய் அகம் ஆயினும் சோராவகை*  இரண்டே அடியால்-
    தாயவன்,*  ஆய்க் குலமாய் வந்து தோன்றிற்று நம் இறையே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன் - பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்
நாயகர் எல்லாம் தொழுமவன் - ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்
ஞாலம் முற்றும் - உலகம் முழுவதையும்
வேய் அகம் ஆயினும் சோரா வகை - ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)
இரண்டே அடியால் தாயவன் - (தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய

விளக்க உரை

தலைவனுடைய நீர்மையைத் தலைவிக்குத் தோழி கூறல் இது. நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற நாயகி ‘பராத்பானா யிருக்கின்ற அத்தலைவன் என்னை ஒருபொருளாகக் கருதி விரைவில் வந்து விவாஹஞ் செய்துகொள்ளுதல் கூடுமோ! என்று கவலைப்பட, அதுகண்ட தோழி; அங்ஙனம் யாவரினும் உயர்ந்த அவனுக்கு அன்புடையார் பக்கல் எளியனாகுந் தன்மையும் இயல்பில் உண்டு’ என்று அவனது ஸௌலப்யத்தையெடுத்துக்காட்டி நாயகிக்கு ஆறுதல் கூறுகின்றாள். இதனால், நமக்கு எளியனாய் வந்து விவாஹஞ் செய்துகொள்வான் என்றதாயிற்று.

English Translation

The lord celestials, worshipped by the gods, measured the Earth in two strides without losing a blade of grass. He is our lord, who came as a cowherd lad. Is there anything we can say about him unequivocally?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்