விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வியலிடம் உண்ட பிரானார்*  விடுத்த திருவருளால்,*
    உயல் இடம் பெற்று உய்ந்தம் அஞ்சலம் தோழி,*  ஓர் தண் தென்றல் வந்து- 
    அயலிடை யாரும் அறிந்திலர் அம் பூந் துழாயின் இன் தேன்*
    புயலுடை நீர்மையினால்,*  தடவிற்று என் புலன் கலனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வியல் - விசாலமான
இடம் - உலகங்களை
உண்ட - திருவயிற்றில் கொண்டருளிய
பிரானார் - பிரபுவாகிய எம்பெருமான்
விடுத்த - (எம்மிடத்துச்) செலுத்திய

விளக்க உரை

நாயகன் இரவிலே வந்து கலந்தமையை நாயகி தன் தோழிக்குக் கூறுதல் ஆற்றாமைக்குக் கலங்கியுரைத்த தோழியைக் குறித்து தலைவி இரவிடத்துத் தலைமையைத் தென்றல் மேல் வைத்து உரைத்த பாசுரம்’ என்ற அழகிய மணவாளசீயருரை வாக்கியங்காண்க. தென்றல் மேல் வைத்துக் கூறுதலாவது- நாயகன் அன்போடு வந்து கலந்த்தை வெளிப்படையாகக் கூறுதற்கு வெட்கப்பட்டுத் தென்றல் மேல்வைத்துக் கூறுதலாம். எனது விரஹவ்யஸநத்தை அநுஸந்தித்து வருந்தா தோழீ! நாயகனது அருளால் யான் உஜ்ஜிவிக்க ஓர் அவகாசம் பெற்று உஜ்ஜீவித்தேன், இனி வாடை முதலியவற்றிற்கு அஞ்ச வேண்டுவதில்லை, ஏனென்னில், - ஒரு குளிர்ந்த தென்றற்காற்று அயலறியாமல் ஏகாந்தமாக நாயகனது திருத்துழாயின் தேனைத் துளித்துக்கொண்டு எனது அவயவங்களிலும் அபரணங்களிலும் பட்டு ஆற்றாமை தீர்த்ததுகாண் என்றாள். பிரிந்த காலத்தில் வெவ்விதாய் வருந்திய தென்றல் குளிர்ந்த்தாம்படி தலைமகன் வந்து தன் திருத்துழாய் மாலையின் தேன் என் அவயவங்களிலும் ஆபரணங்களிலும் படும்படி தழுவியணைத்தன்ன் என்றவாறு.

English Translation

Sister! Have no fear. By the grace of the lord who swallowed the Earth, we have found a refuge and redemption. A cool breeze with the heavenly touch of clouds and laden with the nectar of Tulasi caressed my limbs and my sense, Nobody else knew about this.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்