விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புற்றரவு அல்குல் அசோதை நல் ஆய்ச்சி*  தன் புத்திரன் கோவிந்தனைக்* 
  கற்றினம் மேய்த்து வரக் கண்டு*  உகந்து அவள் கற்பித்த மாற்றம் எல்லாம்*
  செற்றம் இலாதவர் வாழ்தரு*  தென்புது வை விட்டுசித்தன் சொல்* 
  கற்று இவை பாட வல்லார்*  கடல்வண்ணன் கழலிணை காண்பர்களே (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அரவு - பாம்பின் படத்தை ஒத்த;
அல்குல் - அல்குலை உடையளாய்;
அசோதை - யசோதையென்னும் பெயரையுடையளாய்;
நல் - (பிள்ளை திறத்தில்) நன்மையையுடையளான;
ஆய்ச்சி - ஆய்ச்சியானவள்;

விளக்க உரை

இத்திருமொழி கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டுகிறார். ‘புற்றரவல்குலசோதை’ என்று - சமுரகுணமும், ‘நல்’ என்று ஆத்மகுணமுஞ் சொல்லிற்றாகக் கொள்க. கற்பித்த மாற்றம் - இத்திருமொழியில், மூன்றாம் பாட்டிலும் ஒன்பதாம்பாட்டிலும் நியமித்தவாறு காண்க. வாழ்தரு = தரு - துணை வினை. ஹஅடிவரவு :- சீலை கன்னி காடு கடி பற்றார் அஞ்சுடர் பன்றி கேட்டு திண்ணார் புற்று தழை.

English Translation

This decad of songs by Vishnuchitta of Srivilliputtur where the pure-hearted ones live, recalls the words of the slim-waisted Yasoda, the good cowherd-dame, expressing her joy on seeing her son Govinda return from the pastures with the calves. Those who can sing it will see the lotus feet of the ocean-hued Lord.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்