விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கேட்டு அறியாதன கேட்கின்றேன்*  கேசவா! கோவலர் இந்திரற்குக்* 
    காட்டிய சோறும் கறியும் தயிரும்*  கலந்து உடன் உண்டாய் போலும்*
    ஊட்ட முதல் இலேன் உன்தன்னைக் கொண்டு*  ஒருபோதும் எனக்கு அரிது* 
    வாட்டம் இலாப் புகழ் வாசுதேவா!*  உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும்*

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோவலர் - கோபாலர்கள்;
இந்திரற்கு - இந்திரனைப் பூஜிப்பதற்காக;
காட்டிய - அனுப்பிய;
சோறும் - சோற்றையும்;
கறியும் - (அதுக்குத் தக்க) கறியையும்;

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங்கூடி மழையின் பொருட்டாக இந்திரனை ஆராதித்தற்கென்று வழக்கப்படி சமைத்தசோற்றைக் கண்ணபிரான் ஒருகால் அவனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அமுதுசெய்தனனென்ற வரலாற்றைப் பலர் சொல்ல கேட்டுணர்ந்த யசோதைப் பிராட்டி அக்கண்ணனை நோக்கிப் ‘பிரானே! நீ இங்ஙனே செய்தாயோதான்’ என்ன; அவனும் மறுமாற்ற முரையாதொழிய ‘பாசன நல்லன பண்டிகளாற் புகப்பெய்த அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமுந் தயிர்வாவியும் நெய்யளறுமடங்கப் பொட்டத்துற்றின உனக்கு நான் நாடோறு மவ்வளவு சோற்றையூட்டி வளர்க்கைக்கீடான கைச்சாக்கற்றவளாகையால் இனி உன்னை எவ்வாறு வளர்க்கக்கடவதென்று மிகவுமஞ்சாநின்றே னென்கிறாளென்க. முதல் - கைம்முதல்; மூலத்ரவ்யம் என்றபடி.

English Translation

O Vasudeva of everlasting fame! I am hearing things which I never heard before! It seems you gobbled up the food, side-dishes and curds that the cowherds had readied for Indra, all in one gulp! Let alone feeding you every day, keeping you even for one day is going to be difficult for me! From this day on, I Fear you!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்