விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அன்னம் செல்வீரும்*  வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்* 
    முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ*  கண்ணன் வைகுந்தனோடு-
    என் நெஞ்சினாரைக் கண்டால் என்னைச் சொல்லி*  அவரிடை நீர்-
    இன்னம் செல்லீரோ,*  இதுவோ தகவு? என்று இசைமின்களே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னம் செல்வீரும் - (வானத்திற் பறந்து) செல்லுகிற அன்னப்பறவைகளாகிய உங்களையும்
வண்டானம் செல்வீரும்  - (அப்படியே) செல்பவர்களாகிற வண்டானக் குருகுகளாகிய உங்களையும்
தொழுது இரந்தேன் - யான் வணங்கிப் பிரார்த்திக்கின்றேன்

விளக்க உரை

நாயகனைப் பிரிந்த நாயகி அன்னங்களையும் வண்டானங்களையும் தூது வேண்டுகின்றாள். எம்பெருமானிடம் தூது செல்லப் பிரார்த்திப்பதன்று; தன்னை யகன்று நாயகன் பின்சென்ற நெஞ்சின் பக்கல் தூது விடுவதாம். நெஞ்சானது தன்னை விட்டுப் பிரிந்து சென்றதாகவும் அதற்குத் தூது விடுவதற்காகவுஞ் சொல்லுகிறவிது ஒருவகையான சமத்காரமாகும். தலைவனிடத்திலேயே நெஞ்சு நன்றாகப் பதிந்துவிட்டது என்பது இதனால் விளங்கும். “நீரிருக்க மடமங்கை மீர்! கிளிகன் தாமிருக்க மதுகர மெலாம் நிறைந்திருகுக மடவண்ணமுன்ன நிரையாயிருக்க வுரையாமல் யான், ஆரிருக்கிலுமென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லை யென்றாதரத்தினோடு தூது விட்ட பிழை யாரிடத்துரை செய்தாறுவேன் சீரிருக்கு மறை முடிவு தேடரிய திருவாங்கரை வணங்கியே திருத்துழாய்தரில் விரும்பியே கொடு திரும்பியே வருகலின்றியே, வாரிருக்கு முலைமலர் மடந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கிபின்புற முயங்கி யென்னையு மறந்து தன்னையு மறந்ததே” என்ற திருவரங்கக் கலம்பகச் செய்யுள் இங்கு ஸமரிக்கத்தக்கது.

English Translation

O Swans preparing for flight! O Herons preparing for flight! I beg and plead of you. Whoever goes there first, do not forget, If you see my heart with the Valikunta lord Krishna, tell him, -my heart, -about me, impress upon him and ask, "Do you still not go back? Is this proper?".

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்